காலிஃப்ளவர் உருளைக்கிழங்கு கிரேவி

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
7 பேருக்கு
  1. 1பெரிய காலிபிளவர்
  2. 2உருளைக்கிழங்கு
  3. 2 1/2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  4. 5 கிராம்பு
  5. 3 துண்டு பட்டை
  6. 2 ஸ்பூன் சோம்பு
  7. 2 ஏலக்காய்
  8. 2பிரியாணி இலை
  9. 8 பெரிய வெங்காயம்
  10. 6 தக்காளி
  11. 2 1/2 ஸ்பூன் கொத்தமல்லி தூள்
  12. 2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  13. 1 ஸ்பூன் கரம் மசாலாத்தூள்
  14. 3/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  15. உப்பு தேவைக்கேற்ப
  16. 1 கைப்பிடி தேங்காய் துருவல்
  17. 6 முந்திரிப் பருப்பு
  18. தேவையானஅளவு கொத்தமல்லி இலை, கஸ்தூரி மேத்தி

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஏழு பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை தனித் தனியாக வதக்கி அரைத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் மற்றும் 3 ஸ்பூன் நெய் சேர்த்து பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சோம்பு சேர்த்து வதக்கியவுடன் நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். வதக்கி அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தக்காளி விழுதையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

  3. 3

    இப்பொழுது கொத்தமல்லித் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள்,உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும்..

  4. 4

    தேங்காய், முந்திரிப் பருப்பை மிக்ஸியில் அரைத்து சேர்த்துக் கொள்ளவும்.

  5. 5

    வேக வைத்துள்ள உருளைக்கிழங்கு, காலிஃப்ளவரை சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். இறக்கியவுடன் கஸ்தூரி மேத்தி, கொத்தமல்லி இலை தூவி பரிமாறலாம். ஸ்வீட் கான் குஸ்கா வுக்கு ஏற்ற கிரேவி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267
அன்று

Similar Recipes