எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 4 கப் மைதா மாவு
  2. சிறிதளவுஉப்பு
  3. 4 மேஜைக்கரண்டி சமையல் எண்ணெய்
  4. தம் மசாலா தயாரிக்க
  5. அரை கிலோ மட்டன்
  6. இரண்டு பெரிய வெங்காயம்
  7. தக்காளி-2
  8. பச்சை மிளகாய் 5
  9. இஞ்சி பூண்டு விழுது இரண்டு மேஜைக்கரண்டி
  10. ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள்
  11. இரண்டு தேக்கரண்டி மிளகாய் தூள்
  12. இரண்டு தேக்கரண்டி மல்லித்தூள்
  13. ஒரு தேக்கரண்டி மட்டன் மசாலா
  14. பட்டை 5 கிராம்
  15. கிராம்பு 2
  16. ஏலக்காய் 3
  17. அன்னாசிப்பூ 2
  18. பிரிஞ்சி இலை 2
  19. சீரகம் ஒரு தேக்கரண்டி
  20. மிளகு 2 தேக்கரண்டி
  21. உப்பு தேவைக்கேற்ப
  22. சமையல் எண்ணெய் தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

  1. 1

    பாத்திரத்தில் மைதா, எண்ணெய், உப்பு சேர்த்து நன்றாக பிசையவும். பிசைந்த மாவை இரண்டு மணி நேரம் ஈரத்துணி போட்டு மூடி வைக்கவும்.

  2. 2

    மட்டன், வெங்காயம், தக்காளி,பச்சை மிளகாய் அனைத்தையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். வத்தல் பொடி, மல்லி பொடி,மஞ்சள் பொடி, இறைச்சி மசாலா பொடி, சீரகம்,மிளகு,இஞ்சி பூண்டு விழுது அனைத்தையும் தயார் நிலையில் வைக்கவும்.

  3. 3

    பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, பிரிஞ்சி இலை கிராம்பு, ஏலக்காய், பட்டை, அன்னாசிப்பூ போட்டு வதக்கவும். சிறிது நிறம் மாறியதும் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை மணம் போகும் வரை நன்றாக வதக்கவும்.

  4. 4

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் மல்லிப்பொடி, வத்தல் பொடி, இறைச்சி மசாலா பொடி, மஞ்சள் பொடி போட்டு நன்றாக வறுக்கவும். வீட்டில் அரைத்த மசாலா பொடியை உபயோகித்தால் அதையும் நன்றாக வறுத்து சேர்த்துக்கொள்ளலாம். வறுத்த மசாலாவுடன் மட்டன் சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடம் வரை நன்றாக கிளறி விடவும். தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறவும். மட்டன் சிறிய துண்டுகளாக இருப்பதால் இரண்டு முதல் மூன்று விசில் விட்டால் போதுமானது.

  5. 5

    பரோட்டா மாவை சிறு சிறு துண்டுகளாக எண்ணெயில் தேய்த்து உருட்டிக் கொள்ளவும்.

  6. 6

    சப்பாத்திக் கட்டையில் பரோட்டா மாவு போட்டு மெலிதாக தேய்த்துக் கொள்ளவும். மெல்லிதாக தேய்த்த பரோட்டா மாவை வட்டமாக சுற்றி வைக்கவும். அனைத்து துண்டுகளையும் சுற்றி வைத்த பின்பு ஒன்றன்பின் ஒன்றாக பரோட்டாவை தேய்த்துக்கொள்ளலாம்.

  7. 7

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து பரோட்டாவை தயார் பண்ணவும். இருபுறமும் நன்றாக வேக ஒரு துணியால் அழுத்திக் கொடுக்கவும். தயாரான பரோட்டாவை சப்பாத்தி கட்டையில் வைத்து நன்றாக அடித்துக் கொள்ளலாம்.

  8. 8

    அடுப்பில் தோசை கல் வைத்து அதன்மேல் மண்பானையை வைக்கவும். மண்பானை உள்ளே சிறிதளவு எண்ணெய் போட்டு, பரோட்டா, தம் மசாலா, பரோட்டா, தம்மசாலா போட்டு பானையின் மேற்புறத்தை வாழையிலை அல்லது பாயில் பேப்பர் கொண்டு இருக்கமாக மூடவும். தோசைக் கல்லும் மண் பானையும் நன்றாக சூடான நிலையில் அடுப்புத் தீயை குறைத்து வைத்துக் கொள்ளவும். தம் 10 முதல் 15 நிமிடங்கள் வைக்க வேண்டும்.

  9. 9

    சுவையான மட்டன் தம் பரோட்டா ரெடி. பரோட்டா மெதுவாக தம் மசாலாவும் சேர்ந்து சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Abdiya Antony
Abdiya Antony @cook_20751641
அன்று

Similar Recipes