மட்டன் கோலா தேங்காய் பால் குழம்பு

சமையல் குறிப்புகள்
- 1
கொத்துக்கறியை தண்ணீரில் அலசி பிழிந்து வைக்கவும்.
- 2
அதனுடன் ஒரு பெ.வெங்காயம்.இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது.ப.மிளகாய் ஒன்று அரை கப் தே.துருவல்.உப்பு.மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்கவும்.
- 3
ஒரு தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு அரைத்த கலவையை உருண்டை பிடித்து இலேசாக பொரித்து தனியே வைக்கவும்.
- 4
ஒரு கடாயை அடுப்பில் வைத்துஎண்ணெய் ஊற்றி பட்டை.கிராம்பு. ஏலம் தாளிக்கவும்.
- 5
அதில் பெ.வெங்காயம் ஒன்று.தக்காளி ஒன்று.கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 6
மேலும் இரண்டு ஸ்பூன் கறி மசாலா தூள்.ம.தூள்.மி.தூள் இஞ்சி பூண்டு விழுது இரண்டு ஸ்பூன் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 7
மீதமுள்ள தே.துருவலை அரைத்து முதல் பால் ஒரு கப்.இரண்டாம் பால் இரண்டு கப் எடுக்கவும்
- 8
வதக்கிய மசாலாவில் உப்பு.இரண்டாம் பால் சேர்த்து கொதிக்க விடவும்
- 9
கொதிக்கும் குழம்பில் பொரித்த உருண்டைகளை சேர்த்து வேக விடவும்.
- 10
உருண்டைகள் வெந்து மேலே வரும் போது முதல் தே.பால் சேர்த்து இலேசான கொதி வந்ததும் இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
More Recipes
கமெண்ட்