தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2-4 பரிமாறுவது
  1. 300கிராம் ஆட்டு ஈரல்
  2. ஊற வைக்க👇🏻👇🏻👇🏻
  3. 1/2டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  4. 1/2டீஸ்பூன் தனியாத்தூள்
  5. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  6. 1டேபிள் ஸ்பூன் தயிர்
  7. 👇🏻
  8. 1/2டீஸ்பூன் கரம் மசாலா
  9. 1நறுக்கிய வெங்காயம்
  10. 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  11. உப்பு
  12. அரைக்க
  13. 1டேபிள் ஸ்பூன் மிளகு
  14. 1/2டீஸ்பூன் சீரகம்
  15. 1/4டீஸ்பூன் சோம்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஈரலை நன்றாக சுத்தம் செய்து அதில் தயிர் மிளகாய்த்தூள் தனியாத்தூள்

  2. 2

    மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்

  3. 3

    பிறகு ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கரம்மசாலா நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி ஊற வைத்த ஈரலை சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்

  4. 4

    ஈரல் நிறம் மாறியவுடன் உப்பு ஒரு கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து தண்ணீர் வற்றும் வரை வேக வைக்கவும்

  5. 5

    வெறும் கடாயில் மிளகு சோம்பு சீரகத்தை சேர்த்து வாசனை வரும்வரை வறுத்து ஆறிய பிறகு பொடியாக அரைத்துக் கொள்ளவும்... ஈரல் வெந்து தண்ணீர் வற்றியவுடன் அரைத்த மிளகு பொடியை இதனுடன் சேர்த்து ஒரு முறை கிளறவும்

  6. 6

    இறுதியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes