பூண்டு ரசம்

Aishwarya Veerakesari
Aishwarya Veerakesari @laya0431

#mom
பூண்டை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதால் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கலாம். அதிகம் பூண்டு சேர்த்து தயாரிக்கப்பட்ட ரசம் அல்லது சூப் மிதமான சூட்டுடன் அருந்தி வந்தால் பால் சுரப்பு நன்றாக இருக்கும்...

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 15பூண்டு பற்கள்
  2. 1தக்காளி
  3. 1ஸ்பூன்கடுகு
  4. 1/2ஸ்பூன்வெந்தயம்
  5. கறிவேப்பிலை
  6. 1ஸ்பூன்சோம்பு
  7. 1/2ஸ்பூன்பெருங்காயத்தூள்
  8. 3ஸ்பூன்மிளகுத்தூள்
  9. 21/2ஸ்பூன்சீரகம்த்தூள்
  10. 1ஸ்பூன்மஞ்சள்தூள்
  11. உப்பு
  12. தண்ணீர்
  13. 1/4கப்புளிகரைசல்
  14. கொத்தமல்லிதழை

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு,வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்...

  2. 2

    பின்னர் மஞ்சள்தூள், மிளகுத்தூள்,சீரகத்தூள, இடித்து வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்....

  3. 3

    பின்னர் புளிகரைசல் தேவையான தண்ணீர் சேர்த்த பின் கொத்தமல்லி தழை தூவி கொதி வந்ததும் அடுப்பை அணைக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Aishwarya Veerakesari
அன்று

Similar Recipes