மணத்தக்காளி வத்தல்

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

#home
இந்த வத்தல் நீண்ட நாட்கள் பாதுகாத்து வைத்துக்கொண்டு உபயோகிக்கலாம். மிகவும் சுவையானது. மணத்தக்காளியில் கசப்பு தன்மை உள்ளதால் வயிற்றில் உள்ள புண்களை, வாய் புண் எல்லாவற்றையும் குணப்படுத்தும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

....
.....
  1. 1 கப் மணத்தக்காளி
  2. 2டேபிள் ஸ்பூன் உப்பு
  3. 2 கப் மோர்

சமையல் குறிப்புகள்

....
  1. 1

    பச்சை மணத்தக்காளிக்காயை நன்கு கழுவி, உப்பு, மோர் கலந்து இரவு முழுவதும் வைத்துவிட்டு எடுத்து மறுநாள் வெயிலில் காயவைக்கவும். அன்று இரவு மீண்டும் காய்ந்த வத்தலை, மீதமுள்ள மோரில் போட்டு வைத்து, மறுநாள் காலை வெயிலில் போட்டு காய வைக்கவும். இதே போல் மோர் வற்றும் வரை மோரில் போட்டு எடுத்து வெயிலில் காயவைத்து எடுத்தால் நல்ல மணத்தக்காளி வத்தல் தயாராகிவிடும்.

  2. 2

    இந்த வத்தல் செய்ய நல்ல வெயில் இருக்க வேண்டும். வெயில் காலத்தில் மட்டுமே செய்யப்படும் இந்த மணத்தக்காளி வத்தல் நிறைய மாதங்கள், வருடம் கூட பாதுகாத்து வைக்கலாம். தேவைப்படும் போது எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து, மிளகாய் தூள், உப்பு கலந்து வதக்கி, சத்தத்துடன் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

  3. 3

    **இந்த வத்தல் எல்லா மளிகை கடைகளிலும் கிடைக்கும். நாங்கள் எங்கள் தோட்டத்தில் இருந்த காய் வைத்து செய்தோம்.ஒரு சில காய் கசப்பு அதிகம் இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes