சமையல் குறிப்புகள்
- 1
அரை கப் மணத்தக்காளி வற்றல் எடுத்து வைத்துக் கொள்ளவும். இரண்டு மீடியம் சைஸ் பெரிய வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும். 1 மீடியம் சைஸ் தக்காளி பொடியாக அரிந்து கொள்ளவும். ஒரு எலுமிச்சை அளவு புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
அரை கப் தேங்காய் துருவி வைத்துக் கொள்ளவும். 3 வரமிளகாய், அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு, ஒரு ஸ்பூன் கடலை பருப்பு, 1,1/2 ஸ்பூன் கொத்தமல்லி, அரை ஸ்பூன் சீரகம் அரை ஸ்பூன் வெந்தயம் கால் ஸ்பூன் மிளகு1/4 ஸ்பூன் அரிசி இவற்றை ஒரு ஸ்பூன் எண்ணெயில் சிவக்க வறுத்துக் கொள்ளவும். இத்துடன் நாலு பல் பூண்டு, ஒரு துண்டு இஞ்சி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.அத்துடன் துருவிய தேங்காயை சேர்த்து வறுத்துக் கொள்ளவும். இவை ஆறியவுடன் மிக்ஸியில் தண்ணீர் கொஞ்சமாக நீர் சேர்த்து நைஸாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
மணத்தக்காளி வற்றலை எண்ணெய் சேர்த்து வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு குழி கரண்டி அளவு நல்லெண்ணெயை வாணலியில் ஊற்றி, அது காய்ந்தவுடன் கடுகு உளுத்தம்பருப்பு பெருங்காயத்தூள் மற்றும் வர மிளகாய் கருவேப்பிலை தாளித்து அதனுடன் வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். இவை வதங்கிய உடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள்,மூன்று ஸ்பூன் சாம்பார் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும் பிறகு கரைத்த புளித்தண்ணீரை சேர்த்து வெங்காயம் தக்காளியை வேக விடவும்.
- 4
வறுத்து வைத்த மணத்தக்காளி வற்றலை சேர்த்துக்கொள்ளவும். இதை ஒரு கொதி கொதித்தவுடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்துக் கொதிக்கவிடவும்.தங்களுக்கு விருப்பமான அளவு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்துக் கொள்ளவும். மணத்தக்காளி வற்றல் குழம்பு தயார்.
- 5
சாதத்துடன் பிசைந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். தயிர் சாதத்துக்குத் தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும். மணத்தக்காளி வற்றல் வயிற்றுக்கு நல்லது. வயிற்றுப்புண் ஆறும். வயிற்றுப் பூச்சித் தொந்தரவு இருக்காது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மணத்தக்காளி வத்தல் வத்த குழம்பு (Manathakkaali vathal vatha kulambu recipe in tamil)
#arusuvai6 Nalini Shankar -
-
-
-
மணத்தக்காளி வத்தல்
#homeஇந்த வத்தல் நீண்ட நாட்கள் பாதுகாத்து வைத்துக்கொண்டு உபயோகிக்கலாம். மிகவும் சுவையானது. மணத்தக்காளியில் கசப்பு தன்மை உள்ளதால் வயிற்றில் உள்ள புண்களை, வாய் புண் எல்லாவற்றையும் குணப்படுத்தும். Renukabala -
-
-
-
-
-
-
-
-
-
சிகப்பு பூசணி அவரைக்காய் சாம்பார்🎃
#sambarrasamவெங்காயம் தக்காளிபூண்டு சேர்க்காத பருப்பு சாம்பார். மிகவும் சுவையாக இருக்கும். விரத நாளன்று செய்வதற்கு ஏற்ற பருப்பு சாம்பார். நாட்டுக்காய் கொண்டு செய்தது. என் கணவருக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் கூட. Meena Ramesh -
-
-
-
-
குச்சி கிழங்கு இட்லி ஃப்ரை
#leftoverவீட்டில் பொருட்கள் வீணாகும் அளவிற்கு மிச்சமாக பெரும்பாலும் செய்வது கிடையாது. அப்படியிருந்தும் சில நாட்கள் ஏதாவது மீந்து விடும். இன்று காலையில் செய்த இட்லி 4 மீண்டு விட்டது. மாலையில் வேகவைத்த குச்சி கிழங்கு 1 மீந்து விட்டது. இரண்டையும் வைத்து இரவு டிபனுக்கு குச்சி கிழங்கு இட்லி ஃப்ரை செய்துவிட்டேன். சுவையும் நன்றாக இருந்தது. Meena Ramesh -
-
-
-
பூண்டு,கத்திரிக்காய் பருப்பு சாம்பார்🍆
#sambarrasamகத்திரிக்காயை எந்த விதத்தில் செய்தாலும் பூண்டு சேர்த்துக் கொண்டால் மிகவும் சுவையாக இருக்கும்.கத்திரிக்காய் கூட்டு, கத்திரிக்காய் பொரியல் கத்திரிக்காய் சாம்பார், எண்ணெய் கத்திரிக்காய் இப்படி எந்தவகையிலும் கத்தரிக்காய் உடன் பூண்டு சேர்த்து செய்தால் சுவை சூப்பராக இருக்கும். Meena Ramesh -
-
-
-
-
மணத்தக்காளி வத்தல் பொடி (Mnathakkali vathal podi recipe in tamil)
மணத்தக்காளி வத்தல் மற்றும் சுண்டைக்காய். நம் உடலில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் ஆகிய மூன்றையும் கட்டுப்படுத்தும். வாயு தொல்லை, வயிறுப் பொருமல் , முதலிய பிரச்சனைகள் மணத்தக்காளி வத்தல் சுண்டக்காய் பொடியை எடுப்பதன் மூலம் குணமடையும். அன்றாட உணவில் ஒரு டீஸ்பூன் இப்பொடியை சாதத்துடன் கலந்து நெய் சேர்த்து அல்லது நல்லெண்ணெய் சேர்த்து ஒரு உருண்டை சாப்பிட்டால் வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறிடும். Sree Devi Govindarajan -
More Recipes
கமெண்ட்