கிளாக்காய் சாம்பார்😋 (Kalakkaai sambar recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#mom
கர்ப்பிணி பெண்களுக்கு மசைக்கையின் போது பருப்பு பிடிக்காது.ஆனால் பருப்பு புரோட்டீன் கொண்டிருப்பதால் பருப்பு உணவில் கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும். கிலாக் காய் புளிப்பு சுவை மிகுந்தது.மேலும் மசைக்கை காரணமாக ஏற்படும் வாந்தியை கட்டு படுத்த கூடிய சுவை உடையது.பருப்பில் இந்த காயை இரண்டாக அரிந்து விதை எடுத்து சேர்த்து உப்பு காரம் கொஞ்சம் அதிகமாக சேர்த்து சாம்பார் வைத்து குடுத்தால் கர்ப்பிணி பெண்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  1. 1கப் கிலாக் காய்
  2. 10பூண்டு பல்
  3. 1/2 கப் துவரம் பருப்பு
  4. 3 ஸ்பூன் சாம்பார் தூள்
  5. உப்பு தேவையான அளவு
  6. தாளிக்க
  7. 1ஸ்பூன் எண்ணெய்
  8. 1/2ஸ்பூன் கடுகு
  9. 1/4ஸ்பூன் உளுத்தம் பருப்ப
  10. 1வர மிளகாய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    கிளாக் காயை நன்றாக கழுவிக் கொள்ளவும். பிறகு அதை இரண்டாக அரிந்து அதற்குள் இருக்கும் விதையை எடுத்து விடவும். ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு, மற்றும் வரமிளகாயை கிள்ளி தாளிக்கவும். 10 பல் பூண்டை சேர்த்துக் கொள்ளவும். இரண்டாக அரிந்து விதை எடுத்து வைத்த கிலாக்காயை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.இதற்கிடையில் அரை கப் துவரம் பருப்பை வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    இப்போது வதக்கிய கிலாக்காய் உடன் சாம்பார் தூள் சேர்த்து லேசாக வதக்கி கொள்ளவும். பிறகு வேக வைத்த பருப்பை சேர்த்து வேண்டிய அளவு தண்ணீர் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடவும். இதில் உள்ள புளிப்பு போதுமானது ப புளி சேர்க்க தேவையில்லை. சுவையான கிளாக் காய் சாம்பார் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes