வாழை பூ சாம்பார்(vaalaipoo sambar recipe in tamil)

வாழைப்பூ வயிற்றுக்கு மிகவும் நல்லது வயிற்றுப்புண் இருந்தால் வாழைப்பூ சாப்பிட்டால் அதுவும் பாசிப் பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டோம் என்றால் வயிறு புண் ஆறிவிடும். வாழை மரத்தில், காய்க்கும் ,காய்,கனி ,தண்டுகள் வாழை இலை, வாழை பூ அனைத்தும் உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரக்கூடிய ஒரு வகை உணவாகும். வாரம் ஒருமுறை வாழைத்தண்டு அல்லது வாழை பூ வாழை காய் இவற்றை செய்து சாப்பிடவும்.வாழை காய் கண்பார்வைக்கு மிகவும் நல்லது. எது செய்தாலும் வயதானவர்கள் என்றால் எண்ணெய் காரம் புளிப்பு உப்பு குறைவாக சேர்த்து செய்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.சிறிய வயது இளம் வயது இவர்களுக்கு எண்ணெய் சேர்த்து செய்து கொடுக்கலாம் அவர்களுக்கு சுவை தேவைப்படும். என்னுடைய தாழ்மையான கருத்து இது.
வாழை பூ சாம்பார்(vaalaipoo sambar recipe in tamil)
வாழைப்பூ வயிற்றுக்கு மிகவும் நல்லது வயிற்றுப்புண் இருந்தால் வாழைப்பூ சாப்பிட்டால் அதுவும் பாசிப் பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டோம் என்றால் வயிறு புண் ஆறிவிடும். வாழை மரத்தில், காய்க்கும் ,காய்,கனி ,தண்டுகள் வாழை இலை, வாழை பூ அனைத்தும் உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரக்கூடிய ஒரு வகை உணவாகும். வாரம் ஒருமுறை வாழைத்தண்டு அல்லது வாழை பூ வாழை காய் இவற்றை செய்து சாப்பிடவும்.வாழை காய் கண்பார்வைக்கு மிகவும் நல்லது. எது செய்தாலும் வயதானவர்கள் என்றால் எண்ணெய் காரம் புளிப்பு உப்பு குறைவாக சேர்த்து செய்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.சிறிய வயது இளம் வயது இவர்களுக்கு எண்ணெய் சேர்த்து செய்து கொடுக்கலாம் அவர்களுக்கு சுவை தேவைப்படும். என்னுடைய தாழ்மையான கருத்து இது.
சமையல் குறிப்புகள்
- 1
வாழைப்பூ நரம்பு எடுத்துவிட்டு அதில் இருக்கும் தொப்புள் என்கின்ற சதையும் எடுத்துவிட்டு பொடியாக அரிந்து கொள்ளவும். பருப்புக்கு தகுந்த வாழைப்பூ அரிந்துகொள்ளவும். ஒரு தக்காளிப் பழத்தை பொடியாக அரிந்து கொள்ளவும். வெங்காயம் சேர்த்து செய்யலாம் ஆனால் இப்போது நான் வெங்காயம் பூண்டு இவற்றை அரிதாக தான் உணவில் சேர்க்கிறேன். அதனால் நான் வெங்காயம் சேர்க்க வில்லை. துவரம்பருப்பை கழுவி சிறிது மஞ்சள் தூள் மற்றும் விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். நன்கு மசித்துக் கொள்ளவும்.
- 2
இப்போது ஒரு டம்ளர் தண்ணீர் பிரஷர் பேனில் சேர்த்து அதில் வாழைப்பூ தக்காளி உப்பு ஒரு ஸ்பூன் சாம்பார் தூள் இவற்றை சேர்த்து மூடி வைத்து மூன்று சவுண்ட் விடவும். வாழை பூ நன்கு வெந்துவிடும். பிறகு கரைத்து வைத்த புளி தண்ணீரை குறைவாக சேர்த்து நன்கு கொதிக்க விடவும். ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டவும். கடைசியாக அரை ஸ்பூன் சர்க்கரை சுவைக்கு சேர்த்துக் கொள்ளவும்
- 3
சுவையான வாழைப்பூ சாம்பார் தயார். வெங்காயம் சேர்க்காமல் செய்வதால் விரத நாட்கள் கூட இந்த சாம்பார் செய்யலாம். சுவையாக இருக்கும்.
- 4
நான் காரம் குறைவாக உடல் ஆரோக்கியம் கருதி செய்துள்ளேன் தங்களுக்கு தேவையான காரம் உப்பு சேர்த்து அல்லது குறைத்து செய்து கொள்ளலாம். சாதத்திற்கு நெய் சேர்த்து பிசைந்து சாப்பிடவும், சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சுரைக்காய் சாம்பார் சாதம்(in pressure cooker) (Suraikkaai sambar satham recipe in tamil)
# steamசுரைக்காயை வைத்து எளிதான சுவையான சாம்பார் சாதம் இன்று செய்தேன். குக்கெரில் ஆவியில் வேக வைத்து செய்தேன்.சுவை மிகவும் நன்றாக இருந்தது. சுரைக்காய் தவிர வேறு காய்கள் எது வேண்டுமானாலும் சேர்த்து செய்யலாம். மேலும் இரண்டு மூன்று காய்கள் சேர்த்து கதம்ப சாம்பார் சாதம் ஆகவும் செய்யலாம். Meena Ramesh -
நூல்கோல் பச்சைப் பட்டாணி பருப்பு குழம்பு(noolkol pattani paruppu kulambu recipe in tamil)
இந்த குழம்பு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது நூல்கோல் காய் சேர்த்துக்கொள்வது சர்க்கரை நோயை குறைக்கும் மேலும் பச்சை பட்டாணி கண்பார்வைக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
வாழை பூ பருப்பு உசிலி(valaipoo paruppu usili recipe in tamil)
#birthday1பருப்பு உசிலி என்றாலே பீன்ஸ் உசிலி தான் எல்லோர் ஞ்சாபக்கத்திற்கும் வரும், வாழைப்பூ வைத்தும் செய்யலாம்.... இதுவும் என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த மானது... Nalini Shankar -
-
கேரட் துவரம் பருப்பு சாம்பார் (Carrot thuvaramparuppu sambar recipe in tamil)
துவரம் பருப்பு புரத சத்து அதிகம் உள்ளது. கத்திரிக்கா, முருங்கைக்காய், எல்லாவிதமான காய்கறிகள் துவரம் பருப்புடன் சாம்பார் செய்து சாப்பிடலாம். #sambarrasam Sundari Mani -
வாழைப்பூ கூட்டு(vaalaipoo koottu recipe in tamil)
வாழைப்பூ வயிற்றுப்புண்ணுக்கு நல்லது. வயிற்றை சுத்தப்படுத்தும் .manu
-
-
கேரட் சாம்பார்(carrot sambar recipe in tamil)
சுலபமான கேரட் சாம்பார் செய்வது எப்படி என்று கேட்டால் இது சிறந்த முறை ஆகும் parvathi b -
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
#arusuvai3வாழைப்பூ துவர்ப்புச் சுவையுடையது.இது வயிற்றுப் புண்ணை ஆற்றுவதற்கு உதவும். அறுசுவைகளில் ஒரு சுவையாகும். Meena Ramesh -
-
பாசி பருப்பு அரிசி உசிலி (Paasiparuppu arisi usili recipe in tamil)
#onepotஇது டிபன் அயிட்டம். இது காலை அல்லது இரவு டிபனுக்கு செய்யலாம். நாங்கள் விரத நாளன்று இரவு உணவிற்கு செய்வோம். மிகவும் சுவையாக இருக்கும். சாதம் உதிரியாக வேண்டுமென்றாலும் செய்து கொள்ளலாம். குழைய வேண்டும் என்றாலும் செய்து கொள்ளலாம்.தண்ணீர் அதற்கு தகுந்தார்போல் சேர்த்துக் கொள்ள வேண்டும். எப்படி செய்தாலும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
கீரை சாம்பார் சாதம் (Keerai sambar satham recipe in tamil)
#onepotகீரையை இப்படி செய்து பாருங்கள்,ஒரு வாய் சாதம் சேர்த்து சாப்பிடுவார்கள். எப்போதும் கீரை கூட்டு, கீரை பொரியல், கீரை மசியல்,கீரை கடயல் என்பதற்கு பதிலாக இன்று கீரை சாம்பார் சாதம் செய்தேன்.காய்கறிகள் கொண்டு செய்யபடும் சாம்பார் சாதத்தை விட இது மிக அருமையாகவும்,சுவை அலாதியாகவம் இருந்தது.கீரை சாப்பிடாதவர்கள் கூட இப்படி செய்து குடுத்தால் சாப்பிடுவார்கள். Meena Ramesh -
கிளாக்காய் சாம்பார்😋 (Kalakkaai sambar recipe in tamil)
#momகர்ப்பிணி பெண்களுக்கு மசைக்கையின் போது பருப்பு பிடிக்காது.ஆனால் பருப்பு புரோட்டீன் கொண்டிருப்பதால் பருப்பு உணவில் கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும். கிலாக் காய் புளிப்பு சுவை மிகுந்தது.மேலும் மசைக்கை காரணமாக ஏற்படும் வாந்தியை கட்டு படுத்த கூடிய சுவை உடையது.பருப்பில் இந்த காயை இரண்டாக அரிந்து விதை எடுத்து சேர்த்து உப்பு காரம் கொஞ்சம் அதிகமாக சேர்த்து சாம்பார் வைத்து குடுத்தால் கர்ப்பிணி பெண்கள் விரும்பி சாப்பிடுவார்கள். Meena Ramesh -
கதம்பக்காய் சாம்பார் (Kathambakkaai sambar recipe in tamil)
தைப்பொங்கல் என்று பால் பொங்கலுக்கு நாங்கள் செய்யும் சாம்பார் இது. துவரம் பருப்பில் இந்த சாம்பாரில் செய்கிறோம். மிகவும் சுவையாக இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது எல்லா காய்களும் சேர்ப்பதால். Meena Ramesh -
முள்ளங்கி சாம்பார் (Mullanki sambar recipe in tamil)
முள்ளங்கி உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியத்தை அளிக்க கூடிய காய்கறி. வாரம் ஒரு முறை முள்ளங்கியை சமையலில் பயன்படுத்தவும். #அறுசுவை5 Siva Sankari -
உருளைக்கிழங்கு முருங்கைக்காய் சாம்பார் (Urulaikilanku murunkaikaai sambar recipe in tamil)
#arusuvai3 Meena Ramesh -
Steamed diet rava vegetable uppuma recipe in tamil
#ed2 # ravaரவா உப்புமா என்றாலே எண்ணெய் அதிகம் சேர்த்து செய்ய வேண்டும். அப்போதுதான் உப்புமா ருசியாக இருக்கும். ஆனால் வயது ஆக ஆக அதிக எண்ணெய் சேர்த்து உப்புமா சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும்.மேலும் வயிற்றுக்கு ஒத்துக்கொள்வது இல்லை. அதனால் ரவா உப்புமாவை ஆவியில் வேகவைத்து காய்கறிகள் சேர்த்து செய்தால் மிகவும் ருசியாக இருக்கும் என்று யோசித்து செய்தேன். மிக மிக அருமையாக ருசி அமைந்தது. சிறு குழந்தைகளுக்கு என்றால் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து முந்திரிப்பருப்பு சேர்த்து செய்து கொடுக்கலாம். தேங்காய் துருவல் கூட சேர்க்கலாம்.வயதானவர்கள் என்றால் நான் செய்துள்ள முறைப்படி செய்து கொடுக்கலாம். முந்திரிப்பருப்பை அலங்காரத்திற்காக நான் இன்று சேர்த்தேன். வாருங்கள் தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம். Meena Ramesh -
செம்பருத்தி பூ சட்னி (sembaruthi poo chutney recipe in tamil)
#chutneyசெம்பருத்தி பூ எண்ணற்ற பல மருத்துவ குணங்கள் கொண்டது. உடலுக்கு குளிர்ச்சி தருவது. இருதயத்திற்கு மிகவும் நல்லது. முடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. இந்தச் சட்னியில் செம்பருத்திப்பூ, சிறிய வெங்காயம், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, பூண்டு, மிளகாய் ,தக்காளி, கொத்தமல்லி, சேர்த்துள்ளேன். வெங்காயம் மற்றும் பூண்டு கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய து. செம்பருத்திப்பூ இருதயத்திற்கும் வலிமை தரக்கூடியது.உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பில் புரதச் சத்து உள்ளது. சீரகம் மிளகு சேர்த்துள்ளேன். தொண்டை தொற்று தடுக்க முடியும். ஆக எல்லா பொருட்களும் உடலுக்கு நன்மை அளிக்கக் கூடியது. மேலும் சுவையும் அதிகம். இட்லி, தோசை, சாப்பாடு மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ். 15 பூ வரை சேர்த்துக் கொள்ளலாம். எங்கள் வீட்டில் 6,7 பூதான் பூத்தது. அதனால் தக்காளி வெங்காயம் பருப்புகள் சேர்த்து செய்துள்ளேன். நிறைய இருந்தால் உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு சேர்க்க தேவையில்லை. Meena Ramesh -
பீட்ரூட் சாம்பார்(beetroot sambar recipe in tamil)
மிகவும் எளிமையானது மற்றும் மிகவும் சத்தானது Shabnam Sulthana -
தக்காளி பீட்ரூட் மாங்காய் சட்னி(Tomoto, beetroot, and raw mango chutney)
#cf4குழந்தைகள் விரும்பும் வகையில், கண்களை கவரும் வகையில், சுவையில் மிஞ்சும் வகையில், அதேசமயம் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வகையில் ஒரு சுவையான ரெட் கலர் சட்னி. எப்படி இருக்குமோ என்று முயற்சி செய்து பார்த்தேன் மிக மிக அருமையாக இருந்தது. சூடான இட்லிக்கு இன்று காலை சுவையான சட்னி அருமையாக அமைந்தது. தாங்களும் தங்கள் வீட்டில் குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சுவைத்து மகிழும் வகையில் ஒரு முறை செய்து பாருங்கள். நன்றி இங்கனம் மீனா ரமேஷ். Meena Ramesh -
-
பாசி பருப்பு சாம்பார்
#lockdown #bookவீட்டில் இருந்த பாசி பருப்பில் காய் சேர்க்காமல் செய்த சாம்பார்.இட்லி தோசை பொங்கல் சப்பாத்தி பூரி எல்லாவற்றிற்கும் இது சுவையான ஜோடி . Meena Ramesh -
ஆந்திரா ஹோட்டல் டிஃபன் சாம்பார் (Tiffen sambar recipe in tamil)
#apஆந்திரா 2 செல்லும் போது ஹோட்டலில் இதே சுவை கொண்ட சாம்பார் டிபனுக்கு சாப்பிட்டு உள்ளேன். என் ஆந்திர மாநில (விசாகப்பட்டினம்) தோழியிடம் கேட்டு இந்த சாம்பார் செய்தேன். Meena Ramesh -
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கூட்டு.🥗(restuarant style koottu recipe in tamil)
#m2021இந்த ஹோட்டல் ஸ்டைல் கூட்டு எனக்கு மிகவும் பிடிக்கும் எனக்கு மட்டுமல்ல என் கணவருக்கும் மிகவும் இந்த கூட்டுப் பிடிக்கும். இன்று இதில் ஒரே நிறமுள்ள இரண்டு காய்கறிகள் மற்றும் தட்டை காய் வேக வைத்த துவரம்பருப்பு சேர்த்து செய்துள்ளேன் ஆகவே காய்கறியில் உள்ள எல்லா சத்துக்களும் மற்றும் துவரம் பருப்பு தட்டை கையில் உள்ள புரத சத்தும் நம் உடலுக்கு கிடைக்கும். தேங்காய் துருவல் பச்சை மிளகாய் சீரகம் சேர்த்து அரைத்து இந்தக் கூட்டு செய்தேன். Meena Ramesh -
பாலைக்கீரை சாம்பார் (Palak keerai sambar recipe in tamil)
பாலைக்கீரையில் புளி இல்லாத சாம்பார் வைத்தால் சாப்பிட சுவையாக இருக்கும் #samberrasam Sundari Mani -
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் இட்லி சாம்பார் (Restaurent style idli sambar recipe in tamil)
#familyஎன் குடும்பத்தில் எல்லோருக்கும் இந்த அரைத்து விட்ட பருப்பு சாம்பார் இட்லி தோசைக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் வாசனையுடனும் சுவையாகவும் இருக்கும். Meena Ramesh -
வெந்தய காரக் குழம்பு (Vendhaya Kara kuzhambu recipe in Tamil)
#GA4/week2 /Fenugreek*வெந்தயம் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியை தரக்கூடிய பொருள். இது பூ, காய், விதை, கீரை என எல்லாமே மருத்துவ குணங்கள் கொண்டது. இதில் அநேக சத்துக்கள் அடங்கியுள்ளன. வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. kavi murali
More Recipes
கமெண்ட்