கீரை குழம்பு (Keerai kulambu recipe in tamil)

#arusuvai2 எந்த கீரையிலும் பருப்பு சேர்த்து குழம்பு வைக்கலாம். இது அரைக்கீரையில் செய்த பருப்பு குழம்பு. எப்போதும் கீரைக்கூட்டு கீரை பொரியல் கீரை மசியல் கீரை கடைசல் என்று செய்வதை தவிர்த்து ஒருமுறை இப்படி செய்து பார்க்கலாம்.
கீரை குழம்பு (Keerai kulambu recipe in tamil)
#arusuvai2 எந்த கீரையிலும் பருப்பு சேர்த்து குழம்பு வைக்கலாம். இது அரைக்கீரையில் செய்த பருப்பு குழம்பு. எப்போதும் கீரைக்கூட்டு கீரை பொரியல் கீரை மசியல் கீரை கடைசல் என்று செய்வதை தவிர்த்து ஒருமுறை இப்படி செய்து பார்க்கலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
நூறு கிராம் துவரம் பருப்பை கழுவி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்வோம். கீரையை ஆய்ந்து கழுவி சுத்தம் செய்த பின் ஒன்று இரண்டாக அரிந்து கொள்ளவும். 10 சிறிய வெங்காயத்தை தோல் உரித்து இரண்டாக அறிந்து கொள்ளவும் 5பூண்டு தோலுரித்து இரண்டாக அரிந்து கொள்ளவும். ஒரு சிறிய தக்காளி பொடியாக அறிந்து கொள்ளவும்.
- 2
இப்போது ஒரு வானலியில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து அதில் அரை ஸ்பூன் சீரகம்,அரை ஸ்பூன் வரக்கொத்தமல்லி, சேர்த்து லேசாக வதக்கவும் பின்பு அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு,தக்காளி ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். பின்பு கீரையை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி அதில் 2 ஸ்பூன் சாம்பார் தூள் தேவையான உப்பு சேர்த்து பிரட்டிக் கொள்ளவும்.
- 3
இப்போது வேகவைத்த பருப்பை அதில் சேர்க்கவும். மூடி போட்டு ஒரு ஐந்து நிமிடம் வரை வேக விடவும். கீரை வெந்து விட்டதா என்று பார்த்த பின் அதில் கால் கப் அளவிற்கு புளித்தண்ணீரை சேர்க்கவும்.
- 4
புளித்தண்ணீர் சேர்த்து பின் ஒரு கொதி விடவும். தேவை என்றால் ஒரு ஸ்பூன் தேங்காயை அரைத்து இதில் சேர்த்துக்கொள்ளலாம்..சுவை கூடும்..பிறகு தாளிக்கும் கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அரை ஸ்பூன் கடுகு அரை டீஸ்பூன்,உளுத்தம்பருப்பு, 2 வரமிளகாயை கிள்ளி தாளித்து குழம்பில் சேர்க்கவும். சுவையான கீரை குழம்பு தயார். இதை சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். டயட் உணவிற்கு ஏற்ற குழம்பு.
- 5
இப்போது வாணலியில்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
கீரை சாம்பார் சாதம் (Keerai sambar satham recipe in tamil)
#onepotகீரையை இப்படி செய்து பாருங்கள்,ஒரு வாய் சாதம் சேர்த்து சாப்பிடுவார்கள். எப்போதும் கீரை கூட்டு, கீரை பொரியல், கீரை மசியல்,கீரை கடயல் என்பதற்கு பதிலாக இன்று கீரை சாம்பார் சாதம் செய்தேன்.காய்கறிகள் கொண்டு செய்யபடும் சாம்பார் சாதத்தை விட இது மிக அருமையாகவும்,சுவை அலாதியாகவம் இருந்தது.கீரை சாப்பிடாதவர்கள் கூட இப்படி செய்து குடுத்தால் சாப்பிடுவார்கள். Meena Ramesh -
பொன்னாங்கண்ணி கீரை குழம்பு (Ponnaankanni keerai kulambu recipe in tamil)
#jan2பொன்னாங்கண்ணிக் கீரை கண் பார்வைக்கு மிகவும் நல்லது.கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் தொடர்ந்து 48 நாள் பொன்னாங்கண்ணி கீரை எடுத்துக்கொண்டால் பார்வையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.குழந்தைகளுக்கு இப்போது இருந்தே பொன்னாங்கண்ணிக் கீரையை கொடுத்து வந்தால் கண் பார்வை குறைபாடு வராது. Meena Ramesh -
கீரை வேப்புடு (Keerai veppudu recipe in tamil)
இது அரைக்கீரை வைத்து செய்யும் பொரியல் வகை.வேர்க்கடலை பொடி சேர்த்து செய்தேன்.சூப்பராக இருந்தது. #ap Azhagammai Ramanathan -
அரை கீரை பாசி பருப்பு சாதம் (Araikeerai paasiparuppu satham recipe in tamil)
#kids3கூட்டு,பொரியல் ஆக கீரை செய்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் இது போல் காரம் கம்மியாக நெய் சேர்த்து சாதமாக கலந்து தொட்டுக் கொள்ள அவர்களுக்கு பிடித்தார் போல அப்பளம் வடகம் உடன் கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள். Meena Ramesh -
பாகற்காய் சுண்டல் குழம்பு (Paakarkaai sundal kulambu recipe in tamil)
#arusuvai6பாகற்காய் தனியாக கொடுத்தால் குழந்தைகள் உண்ண மாட்டார்கள் .சுண்டல் சேர்த்து குழம்பு வைத்து சூடான சாதத்தில் சேர்த்து பிசையசுவையாக இருக்கும். Hema Sengottuvelu -
கிளாக்காய் சாம்பார்😋 (Kalakkaai sambar recipe in tamil)
#momகர்ப்பிணி பெண்களுக்கு மசைக்கையின் போது பருப்பு பிடிக்காது.ஆனால் பருப்பு புரோட்டீன் கொண்டிருப்பதால் பருப்பு உணவில் கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும். கிலாக் காய் புளிப்பு சுவை மிகுந்தது.மேலும் மசைக்கை காரணமாக ஏற்படும் வாந்தியை கட்டு படுத்த கூடிய சுவை உடையது.பருப்பில் இந்த காயை இரண்டாக அரிந்து விதை எடுத்து சேர்த்து உப்பு காரம் கொஞ்சம் அதிகமாக சேர்த்து சாம்பார் வைத்து குடுத்தால் கர்ப்பிணி பெண்கள் விரும்பி சாப்பிடுவார்கள். Meena Ramesh -
பருப்பு உருண்டை மோர் குழம்பு/Butter milk gravy(Paruppu urundai morkulambu recipe in Tamil)
*நம் முன்னோர்கள் சமைப்பதில் மிகவும் திறமைசாலிகள்.*எப்போதும் வித்தியாசமான முறையில் செய்து சாப்பிடுவது அவர்கள் கைதேர்ந்தவர்கள்.* அப்படித்தான் இந்த பருப்பு உருண்டை மோர் குழம்பு உருவாகியது என்று நினைக்கிறேன்.*இதை எங்கள் வீட்டில் இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.#india2020 kavi murali -
கீரை சாம்பார்(keerai sambar recipe in tamil)
#tkகீரை பொரியல்,மசியல் பிடிக்காதவர்கள் கூட எங்கள் வீட்டில்,கீரை சாம்பார் விரும்பி சாப்பிடுவார்கள்.நீங்களும் முயன்று பாருங்கள். Ananthi @ Crazy Cookie -
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)
#Grand2என்னுடைய ஸ்பெஷல் ரெசிபி இது. Meena Ramesh -
ரேஷன் பருப்பு கூட்டு(பீர்க்கங்காய்) (Peerkangai kootu recipe in Tamil)
#everyday2ரேஷன் பருப்பில் செய்த கூட்டு.மிதமான காரத்தில் பருப்பு சேர்த்து செய்ததால் குழந்தைகளுக்கும் நெய் சேர்த்து சாதத்தில் பிசைந்து ஊட்டலாம். Meena Ramesh -
பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil)
#birthday1என் அம்மாவிற்கு பிடித்த பாரம்பர்ய பருப்பு உருண்டை குழம்பு என் செமுறையில்.... Nalini Shankar -
-
-
கத்தரிக்காய் காராமணி குழம்பு(brinjal kara kulambu recipe in tamil)
#wt2ரோட்டோர கடைகளில் மதிய உணவில் சாப்பாட்டிற்கு இந்த அரைத்துவிட்ட தட்டப்பயறு குழம்பு வைப்பார்கள். இன்று சேலத்தில் சாம்பார் ரசம் அதனுடன் ஒரு புளிக்குழம்பு அல்லது மோர் குழம்பு விடுவார்கள் அதுபோல் வைக்கும் பொழுது இது மாதிரி அரைத்துவிட்ட பயறு ஏதாவது சேர்த்து குழம்பு வைப்பார்கள். Meena Ramesh -
வடக தேங்காய் குழம்பு (Vadaka thenkaai kulambu recipe in tamil)
#coconutஎங்கள் மாமியார் வீட்டு பக்கதார் வழக்கமாக அடிக்கடி செய்யும் புளி குழம்பு இது.இந்த கறி வடகம் எங்கள் பக்கத்து ஸ்பெஷல்.வெயில் காலம் வந்தால் நிறைய செய்து சேமித்து வைத்து கொள்வார்கள்.இதில் நெய் சேர்த்து சூடான சத்தத்துடன் கை குழந்தைகளுக்கு ஊட்டி விடுவோம். நாமும் சிறிது உப்பு சேர்த்து நெய் மற்றும் இந்த வடகத்தை பொரித்து சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.மேலும் தக்காளி பருப்பு சாம்பார்,மாங்காய் சாம்பார்,கீரை போன்றவற்றில் வறுத்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.இந்த வடகம் உளுந்து சின்ன வெங்காயம்,சீரகம் போன்ற பொருட்களை கொண்டு செய்ய வேண்டும்.இந்த வடக ரெசிபி வேண்டுபவர் Bk recipies பார்த்து தெரிந்து கொள்ளவும். நான் ஒருமுறை அவர்கள் வெளி யிட்டு இருந்ததை பார்த்தேன்.இதை நாங்கள் கறி வடகம் என்று சொல்வோம். Meena Ramesh -
அரைக் கீரை கடைசல்(arai keerai kadaisal recipe in tamil)
சத்தான சுவையான அரைக் கீரை கடைசல் இது சாதத்திற்கு சாப்பிட ருசியாக இருக்கும்.#KR Rithu Home -
கீரை கடையல் (Keerai kadaiyal recipe in tamil)
#momகீரை பொதுவாகவே எல்லாருடைய உடல் நலததிற்கும் நல்லது.அதுவும் கற்பமுற்ற காலத்தில் பெண்கள் கட்டாயம் உணவில் கீரை சேர்த்து கொள்ள வேண்டும்.எதுவும் இந்த தருணத்தில் புளிப்பாக இருந்தால் சாப்பிட வாய்க்கு நன்றாக இருக்கும்.கீரையில் தக்காளி ஒன்றுக்கு இரண்டாக சேர்த்து கடைந்தால் வாய்க்கு சாப்பிட சுவையாக இருக்கும். Meena Ramesh -
ஆந்திரா டால் பப்பு (Andhra dhal pappu recipe in tamil)
ஆந்திரா ஸ்டைலில் பாசிப்பருப்பு, பாலகீரை சேர்த்து செய்யும் பருப்பு குழம்பு #ap Sundari Mani -
-
-
பாலக் கீரை சாம்பார் (Paalak keerai sambar recipe in tamil)
#கீரை வகை உணவுகள்#jan2 Soundari Rathinavel -
வல்லாரை கீரை சட்னி (Vallarai keerai chutney recipe in tamil)
வல்லாரை கீரை மூளைக்கு மிகவும் பலம் சேர்க்கும் கீரையாகும் நித்யா இளங்கோவன் -
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு 2(ennai kahirikkai kulambu recipe in tamil)
#made2எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு பட்டை லவங்கம் கரம் மசாலா தூள் சேர்த்தும் செய்யலாம் .அவை இல்லாமல் புளி குழம்பு போலவும் வைக்கலாம்.மசாலா சேர்த்த எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும். Meena Ramesh -
பாகற்காய்,பச்சை சுண்டைக்காய், வெள்ளை கடலை வத்தக் குழம்பு..(vathal kulambu recipe in tamil)
இந்த வத்தக் குழம்பு சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் ஏனென்றால் இதில் பாகற்காய் சுண்டைக்காய் கொண்டைக்கடலை மூன்றும் சேர்த்து இருப்பதால். இவை மூன்றுமே சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது.எப்பொழுதும்போல் வறுத்து அரைத்து குழம்பில் சேர்த்து வத்த குழம்பு வைக்க வேண்டும். Meena Ramesh -
சேனை குழம்பு(yam curry recipe in tamil)
#ed1சேனை குழம்பு வெங்காய சாம்பார் சுட சாதத்தில் சூடாக ஊற்றி நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். Meena Ramesh -
முளைகட்டிய பச்சை பயறு குழம்பு (Sprouted Moong Gravy) (Mulaikattiya payaru kulambu recipe in tamil)
முளைகட்டிய பச்சைப்பயறு குழம்பு மிகவும் சத்துக்கள் நிறைந்தது. சுவையோ அபாரம். எனவே அனைவரும் செய்து சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.#GA4 #Week11 #Sprouts Renukabala -
கண்டி பச்சடி (Kandi pachadi recipe in tamil)
#apஇது நம் ஊரில் செய்யபடும் பருப்பு துவையல் போன்றது.என் அம்மா செய்வார்கள்.ஆனால் எப்படி செய்வார்கள் என்று எனக்கு தெரியாது. நாம் தாளிதம் சேர்க்க மாட்டோம்.ஆந்திரா மக்கள் தாளித்து சேர்கிறார்கள்.மற்றும் இந்த துவயலுக்கு வெல்லம் சேர்கிறார்கள்.நான் வெல்லம் சேர்க்கவில்லை. Meena Ramesh -
பாலைக்கீரை சாம்பார் (Palak keerai sambar recipe in tamil)
பாலைக்கீரையில் புளி இல்லாத சாம்பார் வைத்தால் சாப்பிட சுவையாக இருக்கும் #samberrasam Sundari Mani -
முடக்கத்தான் பருப்பு கீரை கடைதல் 🥗(mudakkathan keerai kadayal recipe in tamil)
வாயு தொல்லை, மலச்சிக்கல், மாதவிலக்கு போன்ற பல பிரச்சனைகள் முடக்கத்தான் கீரை சாப்பிடுவதால் குணமாகும். இது ஒரு சிறந்த பாட்டி வைத்தியம். பல பேருக்கு இந்தக் கீரை வகை பிடிக்காது.ஆனால், இவ்வாறு செய்யும்போது மிகவும் விரும்பி சாப்பிடுவர். RASHMA SALMAN -
முருங்கைக்கீரை பருப்பு அடை (Murunkai keerai paruppu adai recipe in tamil)
#GA4 #week2 spinach என்று கொடுத்துள்ளமையால் முருங்கைக்கீரை வைத்து பருப்பு அடை செய்துள்ளேன். முருங்கைக்கீரை அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. பெண்களுக்கு மிகவும் நல்லது.இது ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்தும். ஆகையால் உணவில் அதிகளவு முருங்கைக் கீரை எடுத்து கொள்ளலாம். Siva Sankari
More Recipes
கமெண்ட்