கீரை சாம்பார் சாதம் (Keerai sambar satham recipe in tamil)

#onepot
கீரையை இப்படி செய்து பாருங்கள்,ஒரு வாய் சாதம் சேர்த்து சாப்பிடுவார்கள். எப்போதும் கீரை கூட்டு, கீரை பொரியல், கீரை மசியல்,கீரை கடயல் என்பதற்கு பதிலாக இன்று கீரை சாம்பார் சாதம் செய்தேன்.காய்கறிகள் கொண்டு செய்யபடும் சாம்பார் சாதத்தை விட இது மிக அருமையாகவும்,சுவை அலாதியாகவம் இருந்தது.கீரை சாப்பிடாதவர்கள் கூட இப்படி செய்து குடுத்தால் சாப்பிடுவார்கள்.
கீரை சாம்பார் சாதம் (Keerai sambar satham recipe in tamil)
#onepot
கீரையை இப்படி செய்து பாருங்கள்,ஒரு வாய் சாதம் சேர்த்து சாப்பிடுவார்கள். எப்போதும் கீரை கூட்டு, கீரை பொரியல், கீரை மசியல்,கீரை கடயல் என்பதற்கு பதிலாக இன்று கீரை சாம்பார் சாதம் செய்தேன்.காய்கறிகள் கொண்டு செய்யபடும் சாம்பார் சாதத்தை விட இது மிக அருமையாகவும்,சுவை அலாதியாகவம் இருந்தது.கீரை சாப்பிடாதவர்கள் கூட இப்படி செய்து குடுத்தால் சாப்பிடுவார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முக்கால் கப் பச்சை அரிசியை நன்கு கழுவி முக்கால் மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும். அரை கப் துவரம் பருப்பை மஞ்சள், கால் ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து குக்கரில் குழைய வேக வைத்துக் கொள்ளவும். கீரையை ஆய்ந்து கழுவி ஒன்றிரண்டாக அரிந்து கொள்ளவும். சின்ன வெங்காயம் தக்காளியை அரிந்து வைத்துக்கொள்ளவும். சிறிய எலுமிச்சை அளவு புளியை ஊறவைத்து கரைத்து வைத்துக் கொள்க.
- 2
ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, வரமிளகாய், ஒரு சிறிய அளவு பட்டை, 2 கிராம்பு,1/2 ஸ்பூன் சீரகம், கால் ஸ்பூன் வரக்கொத்தமல்லி சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பின்பு அதில் தோல் உரித்த சிறிய வெங்காயம், தக்காளி அரிந்தது சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். பின்பு அரிந்த கீரையை சேர்த்து 2 நிமிடம் வதக்கி கொள்ளவும்.இப்போது அரை ஸ்பூன் சாம்பார் தூள், ஒரு ஸ்பூன் வர மிளகாய் தூள், இரண்டு ஸ்பூன் கொத்தமல்லி தூள் சேர்த்து ஒரு நிமிடம் பச்சை வாசம் போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
- 3
இப்போது வேகவைத்த பருப்பை இதில் சேர்த்து கொள்ளவும். நன்கு ஊறிய பச்சை அரிசியை தண்ணீர் வடித்து சேர்த்து கொள்ளவும். ஒரு டம்ளர் அரிசிக்கு 3 டம்ளர் தண்ணீர் வீதம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். உப்பு தேவையான அளவு சேர்த்து கொள்ளவும்.நன்கு கலந்துவிட்டு ஒரு பாத்திரத்தில் சேர்த்து குக்கரில் வைத்து 3 விசில் விடவும். பிறகு மிதமான தீயில் 5 நிமிடம் வைத்திருக்கவும். அடுப்பை நிறுத்தி விடவும்.
- 4
குக்கரில் ஆவி அடங்கியவுடன்பாத்திரத்தை வெளியில் எடுத்து அதில் கரைத்து வைத்த கெட்டியான புளித்தண்ணீரை சேர்த்து 5 நிமிடம் வரை கொதிக்க விடவும்.சாதம் கொழ கொழப்பாக இருந்தால் தான் மிகவும் சுவைாக இருக்கும்.1/2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். கடைசியாக இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளவும். சுவையான கீரை சாம்பார் சாதம் தயார். தொட்டு கொள்ள அப்பளம், வடகம், சிப்ஸ் போன்றவை சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கீரை சாம்பார்(keerai sambar recipe in tamil)
#tkகீரை பொரியல்,மசியல் பிடிக்காதவர்கள் கூட எங்கள் வீட்டில்,கீரை சாம்பார் விரும்பி சாப்பிடுவார்கள்.நீங்களும் முயன்று பாருங்கள். Ananthi @ Crazy Cookie -
கீரை குழம்பு (Keerai kulambu recipe in tamil)
#arusuvai2 எந்த கீரையிலும் பருப்பு சேர்த்து குழம்பு வைக்கலாம். இது அரைக்கீரையில் செய்த பருப்பு குழம்பு. எப்போதும் கீரைக்கூட்டு கீரை பொரியல் கீரை மசியல் கீரை கடைசல் என்று செய்வதை தவிர்த்து ஒருமுறை இப்படி செய்து பார்க்கலாம். Meena Ramesh -
சுரைக்காய் சாம்பார் சாதம்(in pressure cooker) (Suraikkaai sambar satham recipe in tamil)
# steamசுரைக்காயை வைத்து எளிதான சுவையான சாம்பார் சாதம் இன்று செய்தேன். குக்கெரில் ஆவியில் வேக வைத்து செய்தேன்.சுவை மிகவும் நன்றாக இருந்தது. சுரைக்காய் தவிர வேறு காய்கள் எது வேண்டுமானாலும் சேர்த்து செய்யலாம். மேலும் இரண்டு மூன்று காய்கள் சேர்த்து கதம்ப சாம்பார் சாதம் ஆகவும் செய்யலாம். Meena Ramesh -
கோவில் சாம்பார் சாதம்(sambar sadam recipe in tamil)
#வெங்காயம் சேர்க்காத சாம்பார் சாதம்.தங்கள் வீட்டில் என்ன காய்கறிகள் இருக்கிறதோ தகுந்த காய்களை சேர்த்து இந்த சாம்பார் சாதம் செய்யலாம். இதனுடன் உருளைக்கிழங்கு முருங்கைக்காய் கத்திரிக்காய் போன்ற காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். சாதம் எவ்வளவு செய்கிறீர்களோ அதற்கு தகுந்தாற்போல கூடவோ குறைத்தோ காய்களை நறுக்கிக் கொள்ளவும். அதிக காய்கள் இருந்தால் அது அதில் கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளவும். இரண்டு மூன்று காய்கறி வகைகள் என்றால் காய்கறிகளின் அளவை அதிகரித்துக் கொள்ளவும்.இது நைவேத்தியத்திற்கு ஆக செய்த சாம்பார் சாதம் அதனால் வெங்காயம் சேர்க்க வில்லை. நான் இன்று வீட்டில் இருந்த காய்களை வைத்து செய்தேன். Meena Ramesh -
வரகு சாம்பார் சாதம் (Varagu sambar satham recipe in tamil)
#milletsசத்துக்கள் நிறைந்துள்ளன சுவையான சாம்பார் சாதம் Vaishu Aadhira -
எளிமையான வரகு சாம்பார் சாதம் (varagu sambar sadam recipe in tamil)
#Meena Ramesh(1 pot 🍯recipie)இன்று ஒருவருக்கு என்ன செய்வது என்று குழப்பம் ஆனால் கொஞ்சமாக செய்ய வேண்டும் எளிதாக இருக்கவேண்டும். ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். சுவையாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணினேன். அரை மணி நேரத்தில் சுவையான ஆரோக்கியமான எளிதான வரகு சாம்பார் சாதம் தயார் செய்துவிட்டேன். நானே எதிர்பார்க்காத அளவுக்கு மிகவும் சுவையாக இருந்தது. Meena Ramesh -
வெந்தயக் கீரை சட்னி(vendaya keerai chutney recipe in tamil)
கீரையை விரும்பாதவர்கள் கூட இந்த சட்னியை சாப்பிடுகிறார்கள் இவ்வாறு நீங்கள் வெந்தயக் கீரை சட்னி செய்து கொடுக்கும் போது குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் mohammd azeez -
சாமை சாம்பார் சாதம்
#3M#Ilovecookingசிறுதானிய வகைகள் உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது.இவற்றில் பொங்கல், உப்புமா, கஞ்சி, சாதம், சாம்பார் சாதம் போன்ற பலவகை உணவுகள் செய்யலாம். இன்று சாமை சிறு தானியம் வைத்து சாம்பார் சாதம் செய்தேன். நம்மிடம் உள்ள காய்கள் வைத்து செய்யலாம்.இதற் கான காய்கள் கூட வெங்காயம் தக்காளி சேர்க்க வேண்டும். Meena Ramesh -
தண்டு கீரை சாம்பார் (Thandu keerai sambar recipe in tamil)
#sambarrasamகீரை சத்து மிகுந்த உணவு அதில் ஒரு சாம்பார் recipe இதோ MARIA GILDA MOL -
கீரை கடையல் (Keerai kadaiyal recipe in tamil)
#momகீரை பொதுவாகவே எல்லாருடைய உடல் நலததிற்கும் நல்லது.அதுவும் கற்பமுற்ற காலத்தில் பெண்கள் கட்டாயம் உணவில் கீரை சேர்த்து கொள்ள வேண்டும்.எதுவும் இந்த தருணத்தில் புளிப்பாக இருந்தால் சாப்பிட வாய்க்கு நன்றாக இருக்கும்.கீரையில் தக்காளி ஒன்றுக்கு இரண்டாக சேர்த்து கடைந்தால் வாய்க்கு சாப்பிட சுவையாக இருக்கும். Meena Ramesh -
பொன்னாங்கண்ணி கீரை குழம்பு (Ponnaankanni keerai kulambu recipe in tamil)
#jan2பொன்னாங்கண்ணிக் கீரை கண் பார்வைக்கு மிகவும் நல்லது.கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் தொடர்ந்து 48 நாள் பொன்னாங்கண்ணி கீரை எடுத்துக்கொண்டால் பார்வையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.குழந்தைகளுக்கு இப்போது இருந்தே பொன்னாங்கண்ணிக் கீரையை கொடுத்து வந்தால் கண் பார்வை குறைபாடு வராது. Meena Ramesh -
-
சாம்பார் சாதம்.. (Sambar satham recipe in tamil)
#onepot.. காய், பருப்பு மற்றும் அரிசி சேர்த்து செய்யும் சுவையான சாதம்.. என் செய்முறை.. Nalini Shankar -
பிஸிபேளாபாத்/சாம்பார் சாதம் (Bhisibelabath Recipe in Tamil)
#nutrient2விட்டமின்கள் மற்றும் மினரல் சக்தி நிறைந்த காய்கறிகள் மற்றும் புரோட்டின் நிறைந்த பருப்பு, இவற்றின் கூட்டுக்கலவை இந்த சாம்பார் சாதம். சாம்பாராக செய்தாலும், காய்கறிகளில் பொரியல் செய்து கொடுத்தாலும் சாப்பிடமாட்டார்கள். இதுபோல் எல்லா காய்கறிகளையும் சேர்த்து சாம்பார் சாதம் செய்து கொடுத்தால் விரும்பி, பெரியவர் முதல் சிறியவர் வரை சாப்பிடுவார்கள்.துவரம் பருப்பில் புரதச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. முருங்கைக்காயில் விட்டமின் பி காம்ப்ளக்ஸ், சி கே, மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் கால்சியம், ஜிங்க் நிறைந்துள்ளது. கேரட்டில் விட்டமின் ஏ செறிந்துள்ளது. மேலும் விட்டமின் பி6,கே பையோடின், பொட்டாசியம், போன்றவையும் உள்ளது. பீன்ஸில் பல விட்டமின்கள், காப்பர், போலேட், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் ஜிங்க் உள்ளது. தக்காளியில் விட்டமின் ஏ, சி, பி உள்ளது. பச்சை வேர்க்கடலையில் விட்டவன் பி6 உள்ளது. கருப்பு கொண்டை கடலையில் விட்டமின் ஏ பி 6, மற்றும் டி உள்ளது. Meena Ramesh -
இடி சாம்பார்(idi sambar recipe in tamil)
#ed1 சைவ குழம்பு களிலேயே முதலிடத்தில் உள்ளது சாம்பார் தான்... சாம்பார் பொடி ஏற்கனவே நான் பதிவிட்டுள்ளேன்.. அதை பயன்படுத்தி செய்த சாம்பார் தான் இது சுவையும் மணமும் அருமையாக இருக்கும்... Muniswari G -
கீரை மசாலா (Keerai masala recipe in tamil)
கீரையை குழந்தைகள் விரும்ப மாட்டார்கள்.இப்படி ஒருமுறை செய்துப் பாருங்கள்.விரும்பி சாப்பிடுவார்கள்.. Lavanya jagan -
பாலக் புலாவ் (Spinach pulao) (Paalak pulao recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த பாலக் கீரையை வைத்து ஒரு வித்தியாசமான புலாவ் செய்துள்ளேன். இது சிறிய காரத்துடன் நல்ல சுவையாக இருந்தது. கீரை சாப்பிடாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT Renukabala -
கீரை மசியல் (Keerai masiyal recipe in tamil)
#nutrient3கீரையில் எல்லா வித சத்துக்களும் அதிகம்.இரும்பு சத்து மற்றும் நார்ச் சத்துக்கள் அதிகம் இருப்பதால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. ரத்த அழுத்த நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், மற்றும் கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள், அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு கீரையாகும். குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே கீரை கொடுத்து பழக்க வேண்டும். வளரும் குழந்தைகளின் கண் பார்வை திறன் அதிகரிக்கும் . கண்ணாடி அணிய வேண்டிய அவசியமில்லை. Meena Ramesh -
பாலக் கீரை சாம்பார் (Paalak keerai sambar recipe in tamil)
#கீரை வகை உணவுகள்#jan2 Soundari Rathinavel -
கொள்ளு & பருப்பு சாம்பார்(kollu and paruppu sambar recipe in tamil)
#JP எப்பொழுதும் ஒரே மாதிரியாக சாம்பார் வைப்பதற்கு மாற்றாக செய்தேன். சுவையாக இருந்தது.அனைவரும் விரும்பினர்.நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். Ananthi @ Crazy Cookie -
தூதுவளை கீரை சாதம்(thoothuvalai keerai recipe in tamil)
சளி,இருமலுக்கு மிகச்சிறந்த நிவாரணி.குழந்தைகளுக்கு மதிய உணவாகக் கூட கொடுக்கலாம்.கசப்பு இருக்காது.மற்ற கலவை சாதம் போல், சுவையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
அரை கீரை பாசி பருப்பு சாதம் (Araikeerai paasiparuppu satham recipe in tamil)
#kids3கூட்டு,பொரியல் ஆக கீரை செய்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் இது போல் காரம் கம்மியாக நெய் சேர்த்து சாதமாக கலந்து தொட்டுக் கொள்ள அவர்களுக்கு பிடித்தார் போல அப்பளம் வடகம் உடன் கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள். Meena Ramesh -
கேரட் சாம்பார்(carrot sambar recipe in tamil)
சுலபமான கேரட் சாம்பார் செய்வது எப்படி என்று கேட்டால் இது சிறந்த முறை ஆகும் parvathi b -
கிளாக்காய் சாம்பார்😋 (Kalakkaai sambar recipe in tamil)
#momகர்ப்பிணி பெண்களுக்கு மசைக்கையின் போது பருப்பு பிடிக்காது.ஆனால் பருப்பு புரோட்டீன் கொண்டிருப்பதால் பருப்பு உணவில் கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும். கிலாக் காய் புளிப்பு சுவை மிகுந்தது.மேலும் மசைக்கை காரணமாக ஏற்படும் வாந்தியை கட்டு படுத்த கூடிய சுவை உடையது.பருப்பில் இந்த காயை இரண்டாக அரிந்து விதை எடுத்து சேர்த்து உப்பு காரம் கொஞ்சம் அதிகமாக சேர்த்து சாம்பார் வைத்து குடுத்தால் கர்ப்பிணி பெண்கள் விரும்பி சாப்பிடுவார்கள். Meena Ramesh -
கிள்ளு வர மிளகாய் சாம்பார்🌶️(Killu varamilakaai sambar recipe in tamil)
#arusuvai2இந்த வகை சாம்பார், சாம்பார் தூள் அல்லது வரமிளகாய்த்தூள் சேர்க்காத சாம்பார் ஆகும். வரமிளகாய் கிள்ளி செய்யும் சாம்பார். சாப்பாட்டிற்கு சுவையாக இருக்கும். மோர் மிளகாய் இதற்கு தகுந்த ஜோடி. உருளைக்கிழங்கு வருவல், பொடிமாஸ் சேனைக்கிழங்கு சாப்ஸ் போன்றவை தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். அப்பளம், வடகம் போன்றவையும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
பிரண்டை துவையல் சாதம் (Pirandai thuvaiyal satham recipe in tamil)
#onepotஆரோக்கியம் நிறைந்த சத்தான உணவு பிரண்டை சாதம் Vaishu Aadhira -
பால்கறி சாம்பார்(palkari sambar recipe in tamil)
இந்த சாம்பார் இட்லி, தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும் punitha ravikumar -
-
-
*முடக்கத்தான் கீரை சாம்பார்*(mudakathan keerai sambar recipe in tamil)
முடக்கத்தான் கீரையில்,வைட்டமின்களும், தாது உப்புக்களும், அதிகம் உள்ளது.இதை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால், மூலம், மலச்சிக்கல், பக்கவாதம், கிரந்தி போன்ற நோய்கள் குணமாகும்.மூட்டு வலிக்கு இது மிகவும் நல்லது. Jegadhambal N
More Recipes
கமெண்ட் (13)