கருணைக்கிழங்கு Balls (Karunaikilanku balls recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#deepfry கருணைக்கிழங்கு உடம்புக்கு மிகவும் நல்லது இது வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.கருணைக்கிழங்கு வைத்து புளிக் குழம்பு வறுவல் இதுபோன்று செய்யாமல் பொட்டுக்கடலை மாவு சேர்த்து இந்த உருண்டையை செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 3வேகவைத்த கருணைக்கிழங்கு {பிடிகருணை}
  2. 5 டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை மாவு
  3. 1டேபிள்ஸ்பூன் அரிசி மாவு
  4. 1/2 டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள்
  5. சிறிதுபெருங்காயத்தூள்
  6. 1பொடியாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாய்
  7. 1 துண்டு பொடியாக நறுக்கிய இஞ்சி சிறிதளவு
  8. 1பொடியாக நறுக்கிய வெங்காயம்
  9. பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை
  10. தேவைக்கேற்ப உப்பு
  11. பொரிக்க தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    கருணைக் கிழங்கை {பிடிகருணை} உப்பு மஞ்சள்தூள் சிறிது பெருங்காயத் தூள் சேர்த்து குக்கரில் வேக வைத்து தோல் நீக்கி மசித்து வைக்கவும்.

  2. 2

    சித்த கருணைக் கிழங்குடன் பொட்டுக்கடலை மாவு அரிசி மாவு பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை வெங்காயம் இஞ்சி தேவைக்கேற்ப மற்றும் சிறிதளவு சர்க்கரை தூள் சேர்த்து போண்டா விற்கும் மாவு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும்.{பிசையும் பொழுது பிசுபிசு என்று இல்லாமல் நன்கு உருண்டை பிடிக்க பதம் வரும் அளவிற்கு பொட்டுக்கடலை மாவு சேர்த்துக் கொள்ளவும்}

  3. 3

    பொழுது பிசைந்த மாவை சிறுசிறு கோலா உருண்டை போல் உருட்டி கொள்ளவும்.

  4. 4

    தேவையான அளவு எண்ணெய் காயவைத்து எண்ணெய் சூடானதும் மிதமான தீயில் உருட்டி வைத்த உருண்டைகளை பொரித்தெடுக்கவும்.

  5. 5

    மதியம் சாதத்துடனும் தொட்டுக் கொள்ளலாம் அல்லது ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆகவும் இதை செய்து கொடுக்கலாம் மிகவும் ருசியாக எண்ணெய் இழுக்காமல் நன்கு முறுகலாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes