எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 3\4கப்கோதுமை மாவு
  2. 2டேபிள் ஸ்பூன்சாக்கோ பவுடர்
  3. 1\4ஸ்பூன்பேக்கிங் சோடா
  4. 1பின்ச்உப்பு
  5. -1\2கப்தண்ணீர்
  6. 1 ஸ்பூன்இன்ஸ்டன்ட் காபி தூள்
  7. 1ஸ்பூன்பால்
  8. 3 டேபிள் ஸ்பூன்உருக்கிய வெண்ணெய்
  9. 1ஸ்பூன்வினிகர்
  10. 1 ஸ்பூன்வென்னிலா எசன்ஸ்
  11. 1டார்க் சாக்லேட் பார்
  12. 1/2 கப் பொடித்த சர்க்கரை

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    கோதுமை மாவை, சாக்கோ பவுடர் இரண்டுடன் சோடா உப்பு, உப்பு இவற்றை சேர்த்து சலித்துக்கொள்ளவும்

  2. 2

    சலித்த இந்த மாவுடன் அரை கப் பொடித்த சர்க்கரையை சேர்க்கவும்

  3. 3

    ஒரு மிக்ஸிங் பவுலில் அரை கப் தண்ணீரில், காப்பித்தூள், உருக்கிய வெண்ணெய், வெனிலா எசன்ஸ், வினிகர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  4. 4

    இதில் சலித்த மாவை சேர்த்து நன்கு கட்டி இல்லாமல் கலக்கவும்

  5. 5

    குக்கருக்குள் உப்பைக் கொட்டி ஸ்டாண்ட் வைத்து மிதமான தீயில் 10 நிமிடங்கள் ப்ரீஹிட் செய்யவும். ஒரு வட்டவடிவ கிண்ணத்தில் உள்புறம் வெண்ணையை அனைத்து இடங்களிலும் படும்படி தடவி, அதனுள் கேக் பேட்டரை முக்கால் அளவு ஊற்றவும்

  6. 6

    மிதமான தீயில் குக்கருக்கள் வைத்து 30 நிமிடங்கள் பேக் செய்யவும். பிறகு ஒரு கத்தியைக் கொண்டு கேக் வெந்து விட்டதா என்று பார்க்கவும். பிறகு வெந்த கேக்கை வெளியே எடுத்து அதன் மீது பால் சிறிது தடவவும். பிறகு குளிர வைத்து அதனை வேறொரு தட்டிற்கு மாற்றவும்

  7. 7

    இறுதியாக உருக்கிய சாக்லேட்டை கேக் மீது தடவி அலங்கரித்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes