எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

3 மணி நேரம்
8 பரிமாறுவது
  1. ஆல்மண்ட் கஸ்டர்ட் கேக் செய்ய:
  2. 200 கிராம் பட்டர்
  3. 170 கிராம் மைதா
  4. 100 கிராம் பாதாம்
  5. 40 கிராம் கஸ்டர்ட் பவுடர்
  6. 160 கிராம் சர்க்கரை
  7. 2 ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  8. 3/4 ஸ்பூன் பேக்கிங் சோடா
  9. 1/2 ஸ்பூன் ஏலத்தூள்
  10. 1_1/2 ஸ்பூன் பாதாம் எசென்ஸ் அல்லது வெனிலா எசென்ஸ்
  11. சுகர் சிரப் செய்ய:
  12. 1/2 கப் சர்க்கரை
  13. 1/2 கப் தண்ணீர்
  14. ரோஸ் வாட்டர் இரண்டு துளி
  15. ஐசிங் செய்ய:
  16. பட்டர் க்ரீம்:
  17. 100 கிராம் பட்டர்
  18. 200 கிராம் ஐசிங் சுகர்
  19. 50 மில்லி பால்
  20. 1_1/4 ஸ்பூன் வெனிலா எசென்ஸ்
  21. மஞ்சள் புட் கலர் சிறிது
  22. கேக் ஜெல் செய்ய:
  23. கார்ன் சிரப் செய்ய:
  24. 1/2 கப் சர்க்கரை
  25. 1/4 கப் தண்ணீர்
  26. 2 பீஸ் லெமன்
  27. ஜெல் செய்ய:
  28. 1 டேபிள் ஸ்பூன் கார்ன்ப்ளார்
  29. 1/2 கப் தண்ணீர்
  30. 3 டேபிள் ஸ்பூன் கார்ன் சிரப்
  31. ஆரஞ்சு புட் கலர் சிறிது
  32. பச்சை புட் கலர் சிறிது
  33. ரோஸ் வாட்டர் சில துளி
  34. சுகர் பவுண்டட் செய்ய:
  35. 1/2 ஸ்பூன் ஜெலட்டின்
  36. 3 டேபிள் ஸ்பூன் தண்ணீர்
  37. 150 கிராம் ஐசிங் சுகர்
  38. 2 ஸ்பூன் கார்ன் சிரப்
  39. 1/2 ஸ்பூன் பட்டர்
  40. ரோஸ் வாட்டர் சிறிது
  41. ஆரஞ்சு புட் கலர் சிறிது
  42. பச்சை புட் கலர் சிறிது
  43. ரோஸ் புட் கலர் சிறிது

சமையல் குறிப்புகள்

3 மணி நேரம்
  1. 1

    கேக் செய்முறை: தேவையான பொருட்கள் அனைத்தையும் அளந்து கொள்ளவும், பாதாமை அளந்து ஒரு மணி நேரம் வரை வெதுவெதுப்பான நீரில் ஊறவிட்டு,தோல் உரித்து, டவலால் துடைத்து மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்,மைதா உடன் பேக்கிங் சோடா,பேக்கிங் பவுடர்,ஏலத்தூள், பொடித்த பாதாம் பவுடர்,கஸ்டர்ட் பவுடர், ஆகியவற்றை மூன்று முறை ஜலித்து கொள்ளவும்

  2. 2

    பின் முட்டை உடன் பொடித்த சர்க்கரை ஐ சிறிது சிறிதாக சேர்த்து நன்கு நுரைக்க அடிக்கவும் கூட எசென்ஸ் சேர்த்து நிறம் மாறி வெள்ளை நிறத்தில் ரிப்பன் பதத்தில் நுரைக்க அடித்து ஸ்டிப் பாக அடித்து கொள்ளவும் இருபது நிமிடங்கள் வரை நன்கு அடிக்கவும்

  3. 3

    பின் பீட்டரை நிறுத்தி விட்டு ஜலித்து வைத்துள்ள மைதா கலவையை சிறிது சிறிதாக சேர்த்து கரண்டியால் ஒரு புறமாக கலக்கவும் காற்று குமிழிகள் நன்கு உட்புறம் சென்று கேக் மிகவும் சாஃப்ட் ஆக வரும்

  4. 4

    பின் பட்டரை டபுள் பாயில் முறையில் உருக்கி அதனுடன் கலந்து வைத்துள்ள மாவு கலவை ஐ சிறிது எடுத்து உருக்கிய பட்டர் உடன் சேர்த்து கலந்து பின் அதை மாவு கலவை உடன் சேர்த்து நன்கு கலக்கவும்

  5. 5

    பின் பட்டர் தடவி மைதா டஸ்ட் செய்து ரெடியா உள்ள ட்ரேயில் ஊற்றி (நன்கு மடிப்பு மடிப்பாக வர வேண்டும்) டேப் செய்து கொள்ளவும் பின் மைக்ரோவ் அவனை கன்வெக்ஷன் மோல்டில் மாற்றி 10 நிமிடங்கள் சூடான அவனில் வைத்து 35 நிமிடங்கள் வரை பேக் செய்யவும், ஐந்து நிமிடம் கழித்து வெளியே எடுத்து பத்து நிமிடம் வரை ஆறவிடவும் பின் மெதுவாக மோல்டை நீக்கி தட்டில் இருந்து கேக் ஐ மாற்றவும் பின் (கம்பி ஸ்டேண்ட் ல்) நன்கு மூன்று மணி நேரம் வரை ஆறவிடவும்

  6. 6

    ஐசிங் செய்ய: சுகர் சிரப் செய்ய கொடுத்துள்ள சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து மெல்லிய தீயில் 5 நிமிடங்கள் வரை கொதிக்க விட்டு இறக்கி ரோஸ் வாட்டர் சில துளிகள் சேர்த்து நன்கு கலந்து ஆறவிடவும்

  7. 7

    பட்டர் க்ரீம் செய்ய பட்டர் உடன் ஐசிங் சுகர் ஐ சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பீட் செய்யவும் பின் எசென்ஸ் மற்றும் பால் சேர்த்து புட் கலர் சேர்த்து நன்கு பீட் செய்யவும் பின் பிரிட்ஜில் அரை மணி நேரம் வரை வைக்கவும்

  8. 8

    கார்ன் சிரப் செய்ய: சர்க்கரை உடன் தண்ணீர், மற்றும் லெமன் ஃபீஸ்,சேர்த்து மெல்லிய தீயில் வைத்து கொதிக்க விடவும், சர்க்கரை கரைந்து கொதிக்கும் போது லெமன் ஃபீஸ் ஐ எடுத்து விட்டு கொதிக்க விடவும், பின்(ஒரு தட்டில் சிறிது தண்ணீர் ஊற்றி அதில் கொதித்து கொண்டிருக்கும் பாகை எடுத்து சிறிது விட்டால் கரையாமல் கைகளில் எடுக்க வருவது பதம்) பதம் வந்ததும் இறக்கவும்

  9. 9

    பின் ஜெல் செய்ய கார்ன் ப்ளார் உடன் தண்ணீர்,சேர்த்து கரைத்து,கார்ன் சிரப் ஊற்றி, மெல்லிய தீயில் வைத்து கிளறவும், ஜாம் பதத்தில் வருவது பதம், (கார்ன் சிரப் மற்றும் ஜெல் இரண்டிற்கும் அடுப்பை மெல்லிய தீயில் வைத்து செய்வது முக்கியம்) பின் கலர், எசென்ஸ், சேர்த்து கலந்து ஆறவிடவும்,

  10. 10

    சுகர் பவுண்டட் செய்ய: ஜெலட்டின் உடன் சுடு தண்ணீர் சேர்த்து கரைத்து, பதினைந்து நிமிடங்கள் வரை ஊறவிட்டு, பின் டபுள் பாயில் முறையில் நன்கு கிளறி (கரையும் வரை) இறக்கவும், பின் ஐசிங் சுகர், உடன் கார்ன் சிரப், சேர்த்து சிறிது சிறிதாக ஜெலட்டின் கரைசலை ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும், பின் பட்டர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து தனித்தனியாக பிரித்து எசென்ஸ் மற்றும் கலர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்

  11. 11

    பின் ஒரு பட்டர் பேப்பர் அல்லது பாலீதீன் கவரில் சிறிது பட்டர் தடவி கைகளால் மெல்லியதாக தட்டி குக்கிங் கட்டரை கொண்டு விரும்பிய வடிவங்கள் செய்யலாம் அல்லது கைகளால் வடிவங்கள் செய்யலாம் பின் இரண்டு மணி நேரம் வரை காய விடவும்

  12. 12

    கேக் ஐ இரண்டாக கட் செய்து சுகர் சிரப் ஐ ஊற்றி செய்து வைத்துள்ள க்ரீம் ஐ தடவி மேல் இன்னொரு ஃபீஸ் ஐ வைத்து சுகர் சிரப் ஊற்றி க்ரீம் ஐ கேக் முழுவதும் தடவி அலங்கரிக்கவும் பின் இதை அரை மணி நேரம் வரை பிரிட்ஜில் வைக்கவும்

  13. 13

    பின் ரெடியா உள்ள ஜெல்லில் முதலில் ஆரஞ்சு நிற ஜெல் ஐ சிறிது சிறிதாக ஊற்றவும் படத்தில் காட்டியவாறு பின் பச்சை நிற ஜெல் ஐ ஊற்றி படத்தில் காட்டியவாறு ஸ்பூனால் லைன் செய்யவும் பின் பிரிட்ஜில் ஒரு மணி நேரம் வரை வைக்கவும்

  14. 14

    பின் எடுத்து ரெடியா உள்ள சுகர் பவுண்டட் ஐ விரும்பிய வாறு ஒட்டவும் பின் பிரிட்ஜில் 5_6 மணி நேரம் வரை வைக்கவும்

  15. 15

    சுவையான ஆல்மண்ட் கஸ்டர்ட் கேக்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes