அவுல் இனிப்பு கொழுக்கட்டை (Aval inippu kolukattai recipe in tamil)

தயா ரெசிப்பீஸ்
தயா ரெசிப்பீஸ் @DhayaRecipes
Coimbatore

#steam சத்தான மிருதுவான அவுல் கொழுக்கட்டை

அவுல் இனிப்பு கொழுக்கட்டை (Aval inippu kolukattai recipe in tamil)

#steam சத்தான மிருதுவான அவுல் கொழுக்கட்டை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 நபர்
  1. 150 கிராம்அவுல்
  2. 100 கிராம்வெல்லம்
  3. 2 ஸ்பூன்எண்ணெய்
  4. ஏலக்காய் தூள்
  5. 2 ஸ்பூன்எள்ளு
  6. 50 கிராம்தேங்காய் துருவல்
  7. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் அவுலை இளம் வறுப்பாக வறுக்கவும்.வறுத்து ஆறியதும் மிக்ஸி ஜாரில் மாற்றி அரைக்கவும்

  2. 2

    பின்னர் ஒரு கிண்ணத்திற்கு மாற்றி அதில் ஏலக்காய் தூள், உப்பு கால் ஸ்பூன், மற்றும் தண்ணீர் சிறிது சிறிது சிறிதாக சேர்த்து பிசையவும்

  3. 3

    அதை ஒரு 10 நிமிடம் மூடி போட்டு ஊற வைக்கவும்.அதற்குள் கருப்பு எள்ளு,தேங்காய் துருவல் இரண்டையும் தனி தனியாக வறுத்து எடுத்து கொள்ளவும்

  4. 4

    வறுத்த பின்னர் பிசைந்த மாவுடன் எள்ளு,தேங்காய் துருவல் போட்டு கலந்து கொள்ளவும்.கலந்த பின்னர் அதை மிக்ஸி ஜார்க்கு மாற்றி ஒன்னு இரண்டாக அரைத்து கொள்ளவும்

  5. 5

    அடுத்து ஒரு கடாயில் வெல்லத்தை போட்டு அதில் கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி வெல்லம் கரையும் வரை கொதிக்க விடவும். கொதித்ததும் இறக்கி ஒரு கிண்ணத்தில் வடிகட்டி கொள்ளவும்.

  6. 6

    வடிகட்டிய வெல்லத்தைஅரைத்த மாவுடன் ஊற்றி பிசைந்து கொள்ளவும். பிசைந்ததும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து கைகளில் வைத்து விரல் பதியும் மாறு படம் 3 ல் காட்டியவாறு அழுத்தி கொள்ளவும்

  7. 7

    அதே மாறியே எல்லா கலவையும் அழுத்தி எடுத்து கொள்ளவும். பின்னர் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதித்ததும் இட்லி தட்டில் வைத்து மூடி போட்டு 20 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்

  8. 8

    அவ்ளோ தான் நம்முடைய சுவையான இனிப்பு அவுல் கொழுக்கட்டை ரெடி ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
தயா ரெசிப்பீஸ்
அன்று
Coimbatore

Similar Recipes