பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)

பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மேல் மாவு செய்ய: பச்சரிசி ஐ நான்கு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் கழுவி தண்ணீரை வடிகட்டி சுத்தமான மஸ்லின் துணியில் பரப்பி மின்விசிறி அடியில் உலர விடவும் தேங்காய் துருவல் ஐ வெறும் வாணலியில் போட்டு நிறம் மாறாமல் வறுத்து அரிசி உடன் சேர்த்து மாவு மில்லில் கொடுத்து திரித்து கொள்ளவும்
- 2
பின் இதில் இருந்து 1_1/2 கப் மாவை அளந்து கொள்ளவும் பின் தண்ணீர் உடன் உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும் பின் சிறிது சிறிதாக மாவில் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும்
- 3
சாஃப்ட் ஆக பிசைந்து கொள்ளவும் பின் ஈரத்துணி கொண்டு சுற்றி ஒரு மணி நேரம் வரை வைக்கவும்
- 4
பூரணம் செய்ய: பாசிப்பருப்பு ஐ வெறும் வாணலியில் லைட்டா வறுத்து ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் பால் சேர்த்து வேகவிட்டு ஆறியதும் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்
- 5
பின் வெல்லத்துடன் சிறிது 4 (டேபிள் ஸ்பூன்) தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு கரைந்ததும் இறக்கி வடிகட்டவும் பின் வாணலியில் அரைத்த விழுது மற்றும் வெல்ல பாகு சேர்த்து நன்கு கிளறவும்
- 6
பாத்திரத்தில் ஒட்டாமல் தளதளவென்று வரும் போது நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி கிளறவும் பின் நன்கு சுருண்டு வரும் போது ஏலத்தூள் சுக்குத் தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும் (கைகளில் தொட்டு உருட்டினால் ஒட்டாமல் வருவது பதம்)
- 7
இந்த பூரணத்தை பயன்படுத்தி ஒப்பிட்டு, மற்றும் சுழியம் போன்ற பலகாரங்கள் செய்ய பூரணமாக பயன்படுத்தலாம்
- 8
பின் பிசைந்த மாவை மீண்டும் நன்கு பிசைந்து சின்ன உருண்டைகளாக உருட்டி எடுத்து பாலீதீன் கவரில் சிறிது எண்ணெய் தடவி மாவை வைத்து மெல்லியதாக தட்டவும்
- 9
பின் கொழுக்கட்டை மோல்டில் எண்ணெய் தடவி கொண்டு அதில் இந்த மாவை வைத்து பூரணம் வைக்கவும்
- 10
பின் மெதுவாக மூடி அழுத்தி விட்டு பின் மெதுவாக திறக்கவும் அழகான கொழுக்கட்டை வடிவம் ரெடி
- 11
இவ்வாறு அனைத்து கொழுக்கட்டை களையும் ரெடி செய்து ஆவியில் 12 நிமிடங்கள் வரை வேகவிட்டு எடுக்கவும்
- 12
சுவையான பருப்பு பூரண கொழுக்கட்டை ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
தேங்காய் பூரண கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
-
-
பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
#steamஇது நான் பழகிய புதியதில் எனக்கு நன்றாக வரவில்லை, உருண்டை கெட்டியாக இருக்கும் இல்லை என்றால் உருண்டையில ருசியே இருக்காது, கரைந்து விடும், இப்படி பல விதம், பின் நானே விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து இப்போ என்னுடைய பால் கொழுக்கட்டைக்கு எங்க வீட்டுல மட்டும் இல்லை பக்கத்து வீடு எல்லாம் சேர்ந்து ஏகப்பட்ட ஃபேன்ஸ் நீங்களும் இந்த முறையில் முயற்சி செய்து பாருங்கள் Sudharani // OS KITCHEN -
தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)
# steamவிநாயகர் சதுர்த்திக்கு செய்யப்படும் கொழுக்கட்டை களில் இதுவும் ஒன்று.தேங்காய் வெல்லம் ஏலக்காய் சேர்த்து பூரணம் தயாரிப்பு கொழுக்கட்டை மாவில் வைத்து ஆவியில் வேக வைத்து செய்யப்படும் கொழுக்கட்டை. Meena Ramesh -
-
-
-
பாசிப்பருப்பு வேர்கடலை கொழுக்கட்டை(pasiparuppu kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
-
-
-
பதாம் முந்திரி பூரணகொழுக்கட்டை (Badam munthiri poorana kolukattai recipe in tamil)
#steam Vijayalakshmi Velayutham -
பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#steamபருப்புகள் சேர்ந்த சத்தான சுவையான கொழுக்கட்டை இந்த விநாயகர் சதுர்த்திக்கு ட்ரை பண்ணி பாருங்க ... jassi Aarif -
-
தேங்காய் இனிப்பு பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#npd1 - விநாயகர் சதுர்த்தியில் பல வகையான கொழுக்கட்டைகள் செய்து வழிபாடுவது வழக்கம்.. தேங்காய் மட்டும் வைத்து செய்யும் சுவை மிக்க இனிப்பு பூரணகொழுக்கட்டை செய்முறை.. Nalini Shankar -
-
-
இனிப்பு பிடி கொழுக்கட்டை(inippu podi kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட் (7)