சிக்கன் நக்கட்ஸ் (Chicken nuggets recipe in tamil)

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

#deepfry
வைட்டமின்பி6,பி12 புரோட்டின் பாஸ்பரஸ் செலினியம் ஆகிய சத்துக்கள் சிக்கனில் உள்ளது. சுவையான சிக்கன் நக்கட்ஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 200 கிராம் எலும்பு நீக்கப்பட்ட சிக்கன்
  2. 2பிரெட் துண்டுகள்
  3. 1முட்டை
  4. 1 கப் பிரெட் கிரம்ஸ்
  5. 1 ஸ்பூன் சோயாசாஸ்
  6. 1 டீஸ்பூன் பேப்பிரிக்கா அல்லது சில்லி ப்ளேக்ஸ்
  7. 1 டீஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  8. 1 டீஸ்பூன் பால்
  9. உப்பு தேவைக்கு ஏற்ப
  10. 1 டீஸ்பூன் மிளகுத்தூள்
  11. 1 ஸ்பூன் எண்ணெய்
  12. பொரித்து எடுப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    பிரெட்டின் ஓரங்களை வெட்டி விட்டு மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்

  2. 2

    சிக்கனுடன் இஞ்சி பூண்டு விழுது சோயா சாஸ் சில்லி ஃப்ளேக்ஸ் உப்பு மிளகுத்தூள் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    மையாக அறைக்க தேவை இல்லை. அரைத்து சிக்கனை பிரட் உடன் சேர்த்து நன்றாக பிசையவும்

  4. 4

    ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாக பிசையவும். கையால் நன்றாக பரப்பி விடவும்

  5. 5

    சதுரமாக வெட்டிக் கொள்ளவும்

  6. 6

    முட்டையுடன் உப்பு மிளகு தூள் பால் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும். ஒரு தட்டில் பிரட் கிரம்ஸை பரப்பி கொள்ளவும். இப்பொழுது சிக்கன் துண்டுகளை முட்டையில் முக்கி எடுக்கவும்

  7. 7

    முட்டையில் முக்கிய சிக்கன் துண்டுகளை பிரட் கிரம்சில் நன்றாக பிரட்டவும். என்னை நன்றாக காய்ந்தவுடன் சிக்கனை பொரித்து எடுக்கவும்

  8. 8

    சுவையான மொறுமொறுப்பான சிக்கன் நக்கட்ஸ் ரெடி சூடாக பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes