கேரள மத்திமீன் குழம்பு (Kerala matthi meen kulambu recipe in tamil)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

கேரள மக்கள் மீன் குழம்பு வகைகளை விரும்பி சாப்பிடுவர் ,அதிலும் மத்திமீனைஅடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வர்.ஒமேகா3 பேட்டிஏசிட்,இதயத்திற்கு மிகவும் ஹெல்த்தியான உணவு. #kerala

கேரள மத்திமீன் குழம்பு (Kerala matthi meen kulambu recipe in tamil)

கேரள மக்கள் மீன் குழம்பு வகைகளை விரும்பி சாப்பிடுவர் ,அதிலும் மத்திமீனைஅடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வர்.ஒமேகா3 பேட்டிஏசிட்,இதயத்திற்கு மிகவும் ஹெல்த்தியான உணவு. #kerala

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40நிமிடம்
4பேர்
  1. 1/2கிலோ மத்திமீன்
  2. 5சின்ன வெங்காயம்
  3. 1துண்டு இஞ்சி
  4. 7பல் பூண்டு
  5. 3 ப.மி
  6. புளி-1சின்ன எலுமிச்சை அளவு
  7. 1 பின்ச் பெருங்காயத்தூள்
  8. 2தக்காளி
  9. 1 1/2 டீஸ்பூன்காஷ்மீர் மி.தூள்
  10. 2டீஸ்பூன்தனியாத்தூள்
  11. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  12. 1/2 கப் தேங்காய் துருவி
  13. உப்பு-தேவையான அளவு
  14. தாளிக்க
  15. 1/2 டீஸ்பூன்கடுகு
  16. 1/4டீஸ்பூன்வெந்தயம்
  17. 3கறிவேப்பிலை
  18. 4 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

40நிமிடம்
  1. 1

    மீனை சுத்தம் செய்து சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பிசறவும். தேங்காய், சி.வெங்காயம் சேர்த்து நைசாக அரைத்து வைக்கவும். இ.பூண்டு நீள வாக்கில் நைசாக நறுக்கவும்.

  2. 2

    மண்சட்டியில் 2 ஸ்பூன் எண்ணெய்யை சூடு பண்ணிஇஞ்சி, பூண்டு, ப.மிவதக்கி தக்காளி சேர்த்து 3 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும். 3தூள் சேர்த்து பிரட்டி புளி தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

  3. 3

    தேங்காய் விழுதை சேர்த்து 5நிமிடம் மூடி போட்டு கொதிக்க விட்டு லேசாக எண்ணெய் மிதக்கும் போது மீனை சேர்த்து 3 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.பெருங்காயத்தூள் சேர்க்கவும்.

  4. 4

    இப்போது தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து இதில் கலந்து மேலும் 2 நிமிடம் வேக விட்டு இறக்கவும். கொத்தமல்லி கொண்டு அலங்கரிக்க.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Azhagammai Ramanathan
அன்று

Similar Recipes