சவாலை வருவல் கறி(Onion Varuval Kari) (Savaalai varuval kari recipe in tamil)

Madhura Sathish
Madhura Sathish @cook_24972787

#kerala
It suits for doosai idly chappathi rice...

சவாலை வருவல் கறி(Onion Varuval Kari) (Savaalai varuval kari recipe in tamil)

#kerala
It suits for doosai idly chappathi rice...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 4பெரிய வெங்காயம்
  2. 2தக்காளி
  3. 1ஸ்பூன் மிளகாய்த்தூள்
  4. 1/2ஸ்பூன் பெப்பர் தூள்
  5. 1/2ஸ்பூன் மல்லித் தூள்
  6. 2பின்ச் மஞ்சத்தூள்
  7. 1/2ஸ்பூன் கரம் மசாலா
  8. 2பச்சை மிளகாய்
  9. 3பல் பூண்டு
  10. 1இன்ச் இஞ்சி
  11. உப்பு தேவைக்கேற்ப
  12. தாளிக்க
  13. 4கரண்டி தேங்காய் எண்ணெய்
  14. 1ஸ்பூன் கடுகு
  15. 1ஸ்பூன்உளுந்து
  16. 1/2 ஸ்பூன் சோம்பு
  17. கறிவேப்பிலை ஒரு கொத்து
  18. மல்லி இலை சிறிது

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு கொத்தமல்லி இலை அனைத்தையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    கடாயை சூடு ஆன பின்பு தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் கடுகு சீரகம் சோம்பு சேர்த்து வறுக்கவும் அத்தோடு பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின்பு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.

  3. 3

    நன்கு வதங்கிய பின் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அதில் சிறிது அளவு உப்பு சேர்த்து வதக்கவும். வெங்காயம் சிறிது பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும்.

  4. 4

    இப்போது எடுத்து வைத்துள்ள தூளை சேர்க்கவும். பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.தேவைப்பட்டால் இன்னொரு கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். (தேங்காய் எண்ணெயில் தான் நன்கு வதக்க வேண்டும்)

  5. 5

    இப்போது பெப்பர் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும்.

  6. 6

    தக்காளி நன்கு ஸ்மாஷ் ஆகும் வரை வதக்கவும். இப்போது கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து வதக்கவும். நன்கு சுருங்கிய பின் கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும்.

  7. 7

    சப்பாத்தியுடன் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Madhura Sathish
Madhura Sathish @cook_24972787
அன்று

Similar Recipes