மலபார் அவியல் (Malabar aviyal recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#kerala
கேரளா என்றாலே இயற்கை அழகிற்கும்,நீர் வளத்திர்க்கும்,பேசும் மதுரமான கேரள பாசைக்கும்,சுவையான சத்தான,மற்றும் ஆரோக்கியமான உணவு வகைகளுக்கும் பெயர் பெற்றது அங்கு வாழும் மக்கள் பழக மிக இணியமையானவர்கள்.மேலும் அங்கு பட்டை லவங்கம் போன்ற மசாலா பொருட்கள் மிகவும் தரமானது,மற்றும் விலை மலிவானது.ஒவ்வொருவர் வீட்டிலும் தென்னை, பலா, வாழை போன்ற மரங்கள் கட்டாயமாக வளர்க்க படும்.நேந்திரம் மற்றும் மரவள்ளி கிழங்கு மிகவும் பிரசிததமானது.இவர்கள் உணவு வகைகள் பெரும்பாலும் எல்லா காய்கறிகள் கொண்டு செய்ததாக இருக்கும்.பெரும்பாலும் சமையலுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவார்கள்.உணவில் தேங்காய் இன்றியமயாததாகும்.இன்று காய்கறிகள் கொண்டு செய்யபடும் மலபார் அவியல் செய்தேன்.மிகவும் பிடித்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
6 பேர்
  1. 1முருங்கைக்காய்
  2. 1/2 கப் கேரட்
  3. 1/2 கப் அவரை காய்
  4. 1/2 கப் சேனை கிழங்கு
  5. 1/2 கப் வாழைகாய்
  6. 2மீடியம் அளவு கத்தரி காய்
  7. 1/2 கப் பீன்ஸ்
  8. 1/2 கப் சிகப்பு பூசணி
  9. 2 கப் வெள்ளை பூசணி
  10. 1 கப் துருவிய தேங்காய்
  11. 1 கப் கெட்டி தயிர்
  12. 1 ஸ்பூன் சீரகம்
  13. 5 சின்ன வெங்காயம்
  14. 4 பச்சை மிளகாய்
  15. 1/4 கப் தேங்காய் எண்ணெய்
  16. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  17. தேவையானஅளவு உப்பு
  18. கருவேப்பிலை சிறிது

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் எல்லா காய்கறிகளையும் படத்தில் காட்டியுள்ளவாறு 3 அங்குல அளவிற்கு, சன்னமாக அரிந்து கொள்ளவும். கத்தரிகாய் மற்றும் வாழைக்காயையும் அதேபோல் நீளவாக்கில் அரிந்து தண்ணீரில் போடவும். ஒரு கப் புளிக்காத கெட்டித் தயிரை எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு ஸ்பூன் சீரகம், 4 பச்சைமிளகாய், 5 சின்ன வெங்காயம் ஒரு கப் துருவிய தேங்காய் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    கெட்டி வாணலி அல்லது நான்ஸ்டிக் கடாயில் எல்லா காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளவும் அதில் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். வெள்ளை பூசணி நிறைய சேர்ப்பதால் அதிலுள்ள தண்ணீரே வேகவைக்க போதுமானது. மேலும் உப்பும் சேர்ப்பதால் காய் தண்ணீர் விடும். மிதமான தீயில் மூடி வைத்து காய்கறிகளை வேக விடவும். அடிக்கடி காய்களை குலுக்கி விட்டு வேகவிடவும்.

  3. 3

    அதே சமயத்தில் எடுத்து வைத்துள்ள தேங்காய் துருவல், சீரகம், சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை மிக்ஸியில் கொஞ்சம் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். தயிரை நன்கு கடைந்து வைத்துக் கொள்ளவும். 10 நிமிடம் கழித்து மிகவும் கடினமான காய் வெந்து விட்டதா என்று பார்க்கவும். சேனை முருங்கைக்காய் இதை பார்க்கலாம் காய்கள் வெந்து விட்டால் கடைந்து வைத்த தயிரை சேர்த்து கலந்துவிட்டு 2 நிமிடம் திறந்துவிட்டு வேக விடவும். காய்களில் தயிரை கலக்கும்போது காய்கள் குழையாமல் மிதமாக கலந்து விடவும்.

  4. 4

    2 நிமிடங்கள் கழித்து அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து நிதானமாக கலந்துவிடவும். இரண்டு நிமிடம் வரை சூடுபடுத்தவும். பிறகு பச்சை கறிவேப்பிலை மற்றும் கால் கப் தேங்காய் எண்ணெய் சேர்த்து கவனமாக கலந்து விடவும். மூடி வைத்து விடவும்.

  5. 5

    சுவையான மலபார் அவியல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

கமெண்ட் (6)

Similar Recipes