கேரளா ஸ்பெஷல் வாழை பழ ஹல்வா (Vaazhaipazha halwa recipe in tamil)

Durga
Durga @cook_25671729

#kerala கேரளாவில் மிகவும் பிரசித்தமான வாழை பழ ஹல்வா குறைந்த பொருட்களை வைத்து மிகவும் சுலபமாக செய்து விடலாம்

கேரளா ஸ்பெஷல் வாழை பழ ஹல்வா (Vaazhaipazha halwa recipe in tamil)

#kerala கேரளாவில் மிகவும் பிரசித்தமான வாழை பழ ஹல்வா குறைந்த பொருட்களை வைத்து மிகவும் சுலபமாக செய்து விடலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
2 பேர்
  1. 3 வாழை பழம்
  2. 100 கிராம் வெள்ளை சர்க்கரை
  3. 75 கிராம் நெய்
  4. சிறிதளவுமுந்திரி
  5. சிறிதளவுஏலக்காய் தூள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    மூன்று வாழை பழங்களை மிக்ஸியில் நன்றாக அரைத்து கொள்ளவும்

  2. 2

    ஒரு கடாயில் எடுத்து வைத்துள்ள நெய்யில் பாதியளவு நெய்யய் சேர்த்து சூடு படுத்தவும்

  3. 3

    பின்னர் அரைத்து வைத்துள்ள வாழை பழத்தை சேர்க்கவும்

  4. 4

    நெய்யும் வாழை பழமும் நன்றாக கலக்குமாறு கிளற வேண்டும் கை விடாமல் நன்றாக கிளறி கொண்டே இருக்க வேண்டும்

  5. 5

    பத்து நிமிடம் கலந்து விட்ட பின் நூறு கிராம் அளவு சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்

  6. 6

    சர்க்கரை நன்றாக கலந்து கலவை இளகி வரும் மீண்டும் சிறிது நேரம் கிளறி விட வேண்டும்

  7. 7

    ஹல்வா நிறம் மாறி வரும் போது மீதமுள்ள நெய்யயும் சேர்த்து கிளறி விடவும்

  8. 8

    பின்னர் நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய் தூளையும் சேர்த்து கிளறவும்

  9. 9

    ஹல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிளறி கொண்டே இருக்கவும்

  10. 10

    ஒட்டாமல் ஹல்வா திரண்டு வரும் போது பாத்திரத்தில் இருந்து வெளியே எடுத்து நெய் தடவிய பாத்திரத்தில் பரப்பி விடவும்

  11. 11

    பின்னர் சூடு ஆறும் வரை பொறுத்திருந்து ஹல்வா வை வேண்டிய அளவில் கத்தியை வைத்து கட் செய்து கொள்ள வேண்டும். சுவையான வாழை பழ ஹல்வா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Durga
Durga @cook_25671729
அன்று

Similar Recipes