கேரளா அவியல் (Kerala aviyal recipe in tamil)

Dhaans kitchen
Dhaans kitchen @Dhaanskitchen

கேரளா அவியல் (Kerala aviyal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 300கிகாய்கறி கலவை
  2. 1 மூடிதேங்காய் துருவல்
  3. 3பச்சை மிளகாய்
  4. 1 மே.கசீரகம்
  5. 3 மே.கஅதிகம் புளிக்காத தயிர்
  6. 4நசுக்கிய சின்ன வெங்காயம்
  7. 3 மே.கதேங்காய் எண்ணெய்
  8. கருவேப்பிலை
  9. உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    காய்கறிகளை சுத்தம் செய்து நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப காய்கறிகளை எடுத்து கொள்ளலாம்

  2. 2

    வேக அதிக நேரமெடுக்கும் காய்கறிகளை முதலில் சேர்த்து பாதி அளவு வேக வைத்து கொள்ளவும்

  3. 3

    பின் அனைத்து காய்கறிகளையும் சேர்த்து மூடி வைத்து நன்றாக வேக வைத்து கொள்ளவும்

  4. 4

    அரைக்கும் ஜாடியில் தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்

  5. 5

    அரைத்த தேங்காய் கலவை,நசுக்கிய சின்ன வெங்காயம், உப்பை வேக வைத்த காய்கறிகளுடன் சேர்த்து கிளறி 2 நிமிடம் மிதமான தீயில் மூடி வைத்து வேக விடவும்

  6. 6

    தேங்காய் கலவையின்பச்சை வாசனை போனதும் தயிர் மற்றும் கருவேப்பிலை சேர்த்து கிளறி 1 நிமிடம் லேசான தீயில் மூடி வைத்து வேக விடவும்

  7. 7

    இறுதியாக தேங்காய் எண்ணெய் மற்றும் சிறிது கருவேப்பிலை சேர்த்து கலந்து இறக்கவும்

  8. 8

    அருமையான கேரள ஸ்டைல் அவியல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Dhaans kitchen
Dhaans kitchen @Dhaanskitchen
அன்று

Similar Recipes