பெசரட்டு (Pesarettu recipe in tamil)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

ஆந்திராவில் பெசரட்டு, கொன்குரா தொக்கு மிகவும் பாப்புலர்.தாத்தா குண்டூரில் நீதிபதியாக இருந்தார். 2 வருடங்கள் குண்டூரில் இருந்திருக்கிறேன், கார சாராமான ஆந்திர சமையலை ருசித்திருக்கிறேன். பெசரட்டு புரத சத்து நிறைந்தது சுவை மிகுந்தது #ap

பெசரட்டு (Pesarettu recipe in tamil)

ஆந்திராவில் பெசரட்டு, கொன்குரா தொக்கு மிகவும் பாப்புலர்.தாத்தா குண்டூரில் நீதிபதியாக இருந்தார். 2 வருடங்கள் குண்டூரில் இருந்திருக்கிறேன், கார சாராமான ஆந்திர சமையலை ருசித்திருக்கிறேன். பெசரட்டு புரத சத்து நிறைந்தது சுவை மிகுந்தது #ap

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. தோசை மாவு செய்ய:
  2. 2 கப் முழு பயறு
  3. 1 கப் அரிசி
  4. 1 தேக்கரண்டி வெந்தயம்
  5. 2 மேஜை கரண்டி வெங்காயம், நறுக்கியது
  6. 2பச்சை மிளகாய்
  7. 1 மேஜை கரண்டிஇஞ்சி, நறுக்கியது
  8. 4 பல பூண்டு, விரும்பினால்) (optional):
  9. தேவையானஉப்பு
  10. தோசை மாவு செய்ய:
  11. தேவையானஎண்ணை
  12. தோசை மேல் அலங்கரிக்க: விரும்பினால்) (optional):
  13. ¼ கப் வெங்காயம், பொடியாக நறுக்கியது
  14. ¼ கப் கொத்தமல்லி பொடியாக நறுக்கியது
  15. 4பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது
  16. பிரிவு தோசை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    செக்லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சேகரிக்க. சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க

  2. 2

    நீரில் அரிசி, பருப்புகள், வெந்தயம் 6 மணி நேரமாவது ஊறவைக்கவும். கூட இஞ்சி, மிளகாய்,, வெங்காயம் சேர்த்து கிரைண்டரில் போட்டு மழ மழ வென்று அறைக்கவும்., தேவையான உப்பு சேர்த்து அன்றே தோசை செய்யலாம். புளிக்க வைக்க தேவை இல்லை. தோசை செய்ய: மிதத்தீர்க்கும் சிறிது அதிகமான (medium high) நெருப்பின் மேல் தோசை கல்லின் (நான் இரும்பு தோசை கல் தான் உபயோகிப்பேன். அது உஷ்ணம் ரிடைன் (retain) செய்யும்) மேல் எண்ணை தடவுக. மாவுடன் 1 கப் மாவை கல்லின் மேல் ஊற்றி தோசை செய்க, நெருப்பை குறைக்க. மூடுக.

  3. 3

    வெந்த வாசனை வரும். திருப்பி போடுக. பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி மூன்றையும் ஒன்றாக சேர்க்க. உங்களுக்கு தேவையான அளவு இதை தோசை மேல் தூவி சிறிது துடுப்பால் அழுத்துக, மூடி 1 நிமிடம் வைக்க. திருப்ப வேண்டிய அவசியமில்லை. வேண்டுமானால் திருப்பலாம்,

  4. 4

    பெசரட்டு தயார். ருசிக்க

    கொன்குரா தொக்கு, இஞ்சி சட்னி, ஊறுகாய், கூட்டு அல்லது தேங்காய் சட்னி கூட பரிமாறுக.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes