பிசிபேளாபாத் கர்நாடகா ஸ்பெஷல்
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி துவரம்பருப்பு இரண்டையும் நன்றாக கழுவி ஐந்து டம்ளர் தண்ணீர் சேர்த்து சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்து 4 விசில் விட்டு எடுத்து மசித்து வைத்துக் கொள்ளவும்
- 2
வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது எண்ணெய் விட்டு வறுத்து தண்ணீர் சேர்க்காமல் பொடித்து வைத்துக் கொள்ளவும்
- 3
புளியை ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்
- 4
வாணலியில் எண்ணெய் சேர்த்து வெங்காயம் பூண்டு மற்றும் காய்கறிகளை சேர்த்து வதக்கவும் பின்பு மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு ஒரு கப் தண்ணீர் விட்டு வேக வைக்கவும்
- 5
காய்கள் வெந்தவுடன் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து அரைத்து வைத்துப் பொடித்த மசாலாவை சேர்த்து கொள்ளவும்
- 6
புளி தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் மசித்து வைத்துள்ள அரிசி பருப்பு சாதத்தை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி இல்லாமல் கிளறவும்
- 7
மற்றொரு அடுப்பில் எண்ணெய் அல்லது நெய் கடுகு பெருங்காயம் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதனை சாதத்தில் சேர்த்து கிளறி இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கேரள கதம்பக் கறி
#nutrient1 #bookகேரள மாநிலத்தில் எல்லா காய்கறிகளையும் வைத்து கதம்பக் கறி போல செய்வார்கள். இதில் முருங்கைக்காய், வாழைக்காய், கேரட், பீன்ஸ், கொத்தவரங்காய், பூசணிக்காய், வெண் பூசணிக்காய், பீன்ஸ், அவரைகாய் போன்ற காய்களை சேர்த்து செய்யலாம். இன்று என்னிடமிருந்த முருங்கைக்காய், மஞ்சள் பூசணிக்காய், கொத்தவரங்காய், மற்றும் கேரட் கொண்டு இந்த கதம்ப கறியை செய்துள்ளேன். இதில் தேங்காய் பச்சை மிளகாய் சீரகம் மூன்றையும் சேர்த்து அரைத்து சேர்க்க வேண்டும். இதனுடன் தயிர் சேர்த்து செய்தால் அவியல் ஆகும். இந்த காய்கறிகளில் புரத சத்தும் கால்சியம் சத்தும் நிறைந்துள்ளது. கொத்தவரங்காய் இதயத்திற்கு நல்லது. பூசணிக்காய் ,கேரட் கண்பார்வைக்கு நல்லது. முருங்கைக்காய் இரும்புசத்து அதிகம் உள்ளது. எல்லா காய்கறிகளும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆகவும் பலன் தரும். பொதுவாக கேரளா மக்கள் இயற்கைச் சத்துக்களை தான் சமைக்கும் காய்கறிகளில் இருந்து அதிகம் பெறுவார்கள். அதிக காய்கறிகளை கலந்து கலவையாக சாப்பிடுவார்கள். Meena Ramesh -
-
-
-
-
-
முருங்கைக்காய் கத்திரிக்காய் கூட்டு
#bookஇன்று புளி சாதத்திற்கு இந்த கத்திரிக்காய் முருங்கைக்காய் கூட்டை செய்தேன். சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், ரசம் மோர் சாதத்திற்கும் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
மீதமான சாதத்தில் புளியோதரை
#leftover சாதம் மீதமானால் கவலை வேண்டாம், அதை மறுநாள் சமையலாக மாற்றிக் கொள்ளலாம். Priyanga Yogesh -
-
பிஸிபேளாபாத் #karnataka
கர்நாடக மக்களின் பிரத்யேக உணவில் முக்கிய பங்கு வகிப்பது இந்த பிஸிபேளாபாத்,ப்ரெஷ் கிரவுண்ட் மசாலா சேர்த்து சூப்பராக இருக்கும். Azhagammai Ramanathan -
-
-
-
-
பாரம்பரிய பூண்டுகுழம்பு
பூண்டு குழம்பிற்கு காம்பினேஷன் சுடு சாதம் நல்லெண்ணெய் அல்லது நெய் சுட்ட அப்பளம் Jegadhambal N -
-
புளியோகரெ கொஜ்ஜு (Puliyogare gojju)
இந்த புளியோகரே கொஜ்ஜு மைசூர் ஐயங்கார் செய்யும் புளிக்காய்ச்சல். இதை தயாராக செய்து வைத்துக்கொண்டால் எப்போது வேண்டுமானலும் சாதத்தில் கலந்தால் சுவையான புளியோகரே சாதம் சுவைக்க தயாராகிவிடும்.#Karnataka Renukabala -
மாங்காய் துவையல்
சைவ விருந்து பகுதியில் மாவடுவை வைத்து துவையல் ஒன்று செய்திருந்தார்கள் நான் அதை சிறிது மாற்றி கிளி மூக்கு மாங்காயில் துவையல் செய்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து மாங்காயில் துவையல் செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது இந்த துவையலை சாதத்தில் நெய் விட்டு தொட்டுக்கொள்ள சுட்ட அப்பளம் வைத்து சாப்பிட்டால் சுவையோ அபாரம் Jegadhambal N -
பொரிச்ச கூட்டு
#lockdown #bookவீட்டில் இருக்கும் எந்த காய்கறிகளை வைத்தும் இந்த கூட்டை செய்யலாம். உரடங்கினல் வீட்டில் இருந்த உருளைக்கிழங்கு மற்றும் வீதியில் காலையில் விற்று சென்ற முருங்கைக்காய் வைத்து இந்த அருமையான கூட்டை செய்தேன். Meena Ramesh -
எலகோசு கரிமேனசு சித்தாரன்னம்
#karnataka எலகோசு கரிமேனசு என்றால் முட்டைக்கோஸ் மிளகு சாதம்.இது குழந்தைகளுக்கு பள்ளிக்குச் செல்லும் பொழுது லஞ்ச் பாக்ஸ் உணவாக கொடுக்கலாம் Siva Sankari -
-
-
-
-
-
மைசூர் ரசம்(Mysore Rasam recipe in Tamil)
#karnataka*ஒரு தென்னிந்திய உணவு ரசம் இல்லாமல் முழுமையடையாது. இந்திய சூப்பாகக் கருதப்படும் இது செரிமானத்தை மேம்படுத்தும் பொருட்களால் நிரம்பியுள்ளது*பெயர் குறிப்பிடுவது போல மைசூர் ரசம் கர்நாடக உணவில் கட்டாயம் இருக்க வேண்டிய உணவு. இது சூடான வேகவைத்த அரிசியுடன் பரிமாறபடும். kavi murali -
-
More Recipes
கமெண்ட்