மாமியாரின் எள்ளு இஞ்சி சட்னி (Ellu inji chutney recipe in tamil)

Archana Priya
Archana Priya @cook_26341090

இது என் மாமியார் சொல்லி தந்தது. இஞ்சி மற்றும் எள்ளு உடம்பிற்கு மிகவும் வலு சேர்க்கும். கிராமிய மணம் கொண்ட இந்த சட்னி அடை, இட்லி ,தோசை, பேசரட்டு, பழைய சாதம் கூட மிகவும் அருமையாக இருக்கும். #ilovecooking #sundari

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பேர்
  1. 3 டேபிள்ஸ்பூன் எள்ளு
  2. 1 இன்ச் இஞ்சி
  3. 4காய்ந்த மிளகாய்
  4. புளி சுண்டைக்காய் அளவு
  5. உப்பு தேவையான அளவு
  6. கருவேற்பில்லை சிறிதளவு
  7. வெல்லம் விருப்பம் இருந்தால்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    எள்ளை நன்றாக கழுவி, அளசி சுத்தம் செய்து வடிய விடவும்.
    தண்ணீர் வடிந்தபின் அடுப்பை மூட்டி ஒரு கடாயில் எள்ளை வெடிக்க விடவும். பின் அதை ஒரு தட்டில் போட்டு ஆறவிடவும்.

  2. 2

    ஒரு இன்ச் இஞ்சியை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

  3. 3

    அடுப்பு மூட்டி கடாயில் 2 டேபிள் ஸ்பூன் சமையல் எண்ணெய் விட்டு நறுக்கிய இஞ்சி துண்டு, மிளகாய், புளி, கருவேர்பில்லை,உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

  4. 4

    ஆறியவுடன் வதகியதை எள்ளுடன் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து எடுக்வும்.
    விருப்பம் இருந்தால் வெல்லம் சேர்த்து அரைகலாம்.

  5. 5

    கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்

  6. 6

    சுவையான இஞ்சி மற்றும் எள்ளு சட்னி தயார்.

  7. 7

    தமிழ் எழுத்து பிழைக்கு மணிக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Archana Priya
Archana Priya @cook_26341090
அன்று

Similar Recipes