Alasande Kayi palya தட்டைக்காய் பொரியல் (Thattaikaai poriyal recipe in tamil)

Prabha muthu
Prabha muthu @cook_597599

Alasande Kayi palya தட்டைக்காய் பொரியல் (Thattaikaai poriyal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடம்
3பேர்
  1. கால் கிலோதட்டை காய்
  2. 100 கிராம்வெங்காயம்
  3. 2தேங்காய் துண்டு
  4. பத்துபூண்டு பல்
  5. 4வர மிளகாய்
  6. ஒரு ஸ்பூன்சீரகம்
  7. கடுகு கடலை பருப்பு தாளிக்க
  8. எண்ணெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20நிமிடம்
  1. 1

    தட்டை காயை அலசி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்

  2. 2

    மிக்ஸி ஜாரில் தேங்காய் சீரகம் பூண்டு வரமிளகாய் ஆகியவற்றை நன்றாக பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்

  3. 3

    வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு கடலைப்பருப்பு தாளித்து சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்

  4. 4

    வெங்காயம் நன்கு வதங்கியவுடன் காய் வதங்க தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்

  5. 5

    காய் நன்றாக வதங்கியவுடன் அரைத்து வைத்திருக்கும் விழுதை அதனுடன் சேர்த்து கிளற வேண்டும்

  6. 6

    தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும் சுவையான கர்நாடகா ஸ்டைலில் தட்டை காய் பொரியல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Prabha muthu
Prabha muthu @cook_597599
அன்று

Similar Recipes