பிரட் பாத் (Bread bath recipe in tamil)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

கர்நாடக மக்கள் மாலை நேர சிற்றுண்டிக்கு இதை செய்வர். ஸ்பைஸ் பவுடர் ,மல்ட்டி க்ரெயின் பிரட் சேர்த்து செய்தேன், மிகவும் சுலபம். #karnataka

பிரட் பாத் (Bread bath recipe in tamil)

கர்நாடக மக்கள் மாலை நேர சிற்றுண்டிக்கு இதை செய்வர். ஸ்பைஸ் பவுடர் ,மல்ட்டி க்ரெயின் பிரட் சேர்த்து செய்தேன், மிகவும் சுலபம். #karnataka

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடம்
3 பேர்
  1. 6 ஸ்லைஸ் மல்ட்டி க்ரெய்ன் பிரட்
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 1 பெரிய தக்காளி
  4. 1 ஸ்பூன்இ.பூண்டு விழுது
  5. 1 ப.மி
  6. 1ஆர்க் கறிவேப்பிலை
  7. கொத்தமல்லி-சிறிது
  8. 1 1/4டீஸ்பூன் பாவ் பாஜி மசாலா
  9. 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  10. தாளிக்க
  11. 2 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  12. 1/2டீஸ்பூன்சீரகம்
  13. 1 டேபிள் ஸ்பூன்கடலைப்பருப்பு

சமையல் குறிப்புகள்

15நிமிடம்
  1. 1

    பிரட் ஓரங்கள் நீக்கி சின்ன சதுரங்களா கட் பண்ணவும்.வெங்காயம், தக்காளி, ப.மி,கொத்தமல்லி நைசாக கட் பண்ணவும்.

  2. 2

    பேனில் எண்ணெய் ஊற்றி க.ப,சீரகம் தாளித்து, வெங்காயம்,ப.மி,கறிவேப்பிலை-சிறிது வதங்கி பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

  3. 3

    தேவையான உப்பு சேர்த்து மசிந்ததும் தூள் வகைகள் சேர்த்து 2 நிமிடம் கிளறவும்.

  4. 4

    சிறிது தண்ணீர் சேர்த்து 1 நிமிடம் கழித்து சற்று வற்றியவுடன் பிரட் துண்டுகளை சேர்க்கவும்

  5. 5

    நன்றாக கலந்து சிம்மில் ஒரு மூன்று நிமிடம் வைத்து கடைசியாக கொத்தமல்லி இலைகள் தூவி இரண்டு தடவை கிண்டி இறக்கவும்.

  6. 6

    இப்போது சுட சுட பிரட்பாத் சாப்பிட தயாராகிவிட்டது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Azhagammai Ramanathan
அன்று

Similar Recipes