சத்துமாவு பான்கேக் (Health Mix Pancake)

Shalini Prabu
Shalini Prabu @cook_17346945

#GA4 #week2குட்டிஸ்களுக்கு மிகவும் பிடித்த சத்தான சத்துமாவு பான்கேக்(Pancake). காலை அல்லது மாலை வேளைகளில் இதை செய்து கொடுக்கலாம்.

சத்துமாவு பான்கேக் (Health Mix Pancake)

#GA4 #week2குட்டிஸ்களுக்கு மிகவும் பிடித்த சத்தான சத்துமாவு பான்கேக்(Pancake). காலை அல்லது மாலை வேளைகளில் இதை செய்து கொடுக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 நபர்
  1. சத்துமாவு - 2 ஸ்பூன்
  2. முட்டை - 1
  3. சர்க்கரை/வெல்லம் - 2 டீஸ்பூன்
  4. பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
  5. நெய் - 1 டீஸ்பூன்
  6. கொதித்து ஆற வைத்த பால் - 1/4 கப்
  7. உப்பு - 1 சிட்டிகை

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    முட்டை எடுத்து நன்றாக அடித்து கொள்ளவும்.

  2. 2

    பிறகு 2 மேஜைக்கரண்டி சத்துமாவு, பேக்கிங் சோடா, சர்க்கரை சேர்க்கவும்.

  3. 3

    நெய்,1 சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

  4. 4

    கொதித்து ஆற வைத்த பால் சேர்க்கவும்.பாலிற்கு பதிலாக தண்ணீர் உபயோகிக்கலாம்.

  5. 5

    தோசை மாவை விட சிறிது கெட்டியாக மாவை கரைத்து கொள்ளவும்.தோசை கல்லை சூடானதும் அதில் பான்கேக் போல சுட்டு எடுத்து கொள்ளவும்.

  6. 6

    மூடி போட்டு வெந்தவுடன் திருப்பி போடவும்.மேலே சிறிது தேன் ஊற்றி பரிமாறவும்.

  7. 7

    சத்துமாவு பான்கேக் தயார்!!!!சத்தான இதை உடனே செய்து பாருங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shalini Prabu
Shalini Prabu @cook_17346945
அன்று

Similar Recipes