எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30-40 நிமிடங்கள்
5 சர்விங்ஸ்
  1. 10 கரண்டி தோசை மாவு
  2. தேவையானஅளவு எண்ணெய்
  3. கொத்துக்கறி செய்ய
  4. 1/2 கிலோ மட்டன் கொத்துக்கறி
  5. 2நறுக்கிய வெங்காயம்
  6. 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  7. 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  8. 1/4 டீஸ்பூன் கரம் மசாலா
  9. 1/4 டீஸ்பூன் தனியாத்தூள்
  10. 1 டீஸ்பூன் மட்டன் மசாலா
  11. 1 டேபிள்ஸ்பூப் தயிர்
  12. 1/2 கப் தண்ணீர்
  13. 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள்
  14. சிறிதுநறுக்கிய கொத்தமல்லி இலை
  15. உப்பு

சமையல் குறிப்புகள்

30-40 நிமிடங்கள்
  1. 1

    வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி கறியை சேர்த்து ஒரு நிமிடம் அதிக தீயில் வதக்கவும்

  2. 2

    பிறகு மிதமான தீயில் 3 நிமிடம் வதக்கவும் பிறகு இதில் மிளகாய் தூள், கரம் மசாலா

  3. 3

    தனியாத்தூள், மட்டன் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போக மிதமான தீயில் நன்றாக வதக்கவும்

  4. 4

    பிறகு இதில் தயிர் சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கி அரை கப் தண்ணீர் ஊற்றி குறைந்த தீயில் மூடி 15 நிமிடம் வேக வைக்கவும்

  5. 5

    கொத்துக் கறி வெந்த பிறகு இதில் மிளகுத்தூள் நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து அதிக தீயில் வைத்து வதக்கவும்

  6. 6

    தண்ணீர் முழுவதும் வற்றி சுண்டி வரும் பொழுது எடுக்கவும்... கொத்துக் கறி தயார்... அடுப்பில் தோசை சட்டியை வைத்து சூடு செய்து எண்ணெய் தேய்த்துக்கொள்ளவும், பிறகு 2 கரண்டி மாவு விட்டு ஊத்தப்பம் போல் தோசை வார்க்கவும், இப்போது குறைந்த தீயில் வைத்து 100 கிராம் அளவு தயாரித்து வைத்திருக்கும் கொத்துக்கறியை இதன் மேல் எல்லா இடங்களிலும் பரவும்மாறு வைக்கவும், சுற்றிலும் எண்ணெய் விடவும்

  7. 7

    இப்போது தோசை சட்டியை மூடி 2 நிமிடம் தோசையை கொத்து கறி வேகும் வரை வைக்கவும் பிறகு திருப்பிப் போட்டு அதிக தீயில் ஒரு நிமிடம் வைத்து எடுக்கவும்

  8. 8

    சுவையான மட்டன் கொத்துக்கறி தோசை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes