உளுந்து வடை & தயிர் வடை (urad dal vada &  Curd vada)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

உளுந்து வடை செய்து, தயிரில் சேர்த்து தாளிப்பு கொடுக்கும் இந்த வடையில் துருவிய கேரட், மல்லி சேர்க்கும்போது மிகவும் சுவை அதிகரிக்கும்.
#ONEPOT

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
  1. 1 கப் முழு வெள்ளை உளுந்து
  2. 1 டேபிள் ஸ்பூன் புழுங்கல் அரிசி
  3. 3 பச்சை மிளகாய்
  4. ஒரு சிறிய துண்டு இஞ்சி
  5. கறிவேப்பிலை
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணை பொறிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    அரிசி, உளுந்தை நன்கு கழுவி ஒரு மணி நேரம் ஊறவைத்து எடுத்து கிரைண்டரில் சேர்த்து, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலையும் சேர்த்து அரைக்கவும். அவ்வப்போது (தேவைப்பட்டால்)தண்ணீர் தெளித்து மிகவும் கெட்டியாக அரைத்து எடுத்து ஒரு அகலமான பௌலில் சேர்க்கவும்.

  2. 2

    பின்னர் உப்பு சேர்த்து நன்கு அடித்து கலக்கவேண்டும். மாவில் உள்ள காற்று வெளியில் போகவேண்டும். அப்போது தான் வடை மிருதுவாக வரும். பின்னர் எடுத்து கையை தண்ணீரில் நனைத்துக்கொண்டு உருட்டி, நடுவில் ஓட்டை செய்து எண்ணெயில் பொரிக்கவும்.

  3. 3

    வாணலியை ஸ்டவ்வில் வைத்து aஎண்ணை ஊற்றி காய்ந்ததும், வடைகளை இரண்டு அல்லது மூன்று போட்டு பொறிக்கவும்.ஒரு பக்கம் பொரிந்ததும் மறு பக்கம் திருப்பிப்போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். மிதமான சூட்டில் வைத்துக்கொண்டு பொரித்தால் சுவையான உளுந்து வடை தயார்.

  4. 4

    நல்ல புளிக்காத கெட்டி தயிரை எடுத்து கொஞ்சம் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.

  5. 5

    ஒரு கடாயில் எண்ணை சேர்த்து காய்ந்ததும், கடுகு உளுந்து, கறிவேப்பிலை, வற்றல் சேர்த்து பொரிந்ததும் தயாராக வைத்துள்ள தயிரில் சேர்த்து, பொரித்து வைத்துள்ள வடையை சேர்த்து கலந்து, வடை தயிரில் மூழ்கும் படி அரைமணி நேரம் வைத்தால் நன்கு வடை ஊறிவிடும்.

  6. 6

    பின்னர் எடுத்து பரிமாறும் தட்டில் சேர்த்து, கொஞ்சம் தாளிப்பு, துருவிய கேரட், நறுக்கிய மல்லி இலை தூவி அலங்கரித்தால் சுவையான தயிர் வடை சுவைக்கத்தயார்.

  7. 7

    இந்த வடை இரவு நேர சிற்றுண்டியாக கூட சுவைக்கலாம். இதே முறையில் செய்தால் வடை மிகவும் நன்றாக தயிரில் ஊறி மிருதுவாக இருக்கும். அனைவரும் செய்து சுவைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes