சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)

Durga
Durga @cook_25671729

#GA4 ஓவன் இல்லாமல் கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
3 பேர்
  1. 150 கிராம் மைதா
  2. 2 டேபிள் ஸ்பூன் கொக்கோ பவுடர்
  3. 2முட்டை
  4. 3 டேபிள் ஸ்பூன் சமையல் எண்ணெய்
  5. 1/2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  6. 50 கிராம் சுகர் பவுடர்
  7. 50 மிலி பால்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக நுரை பொங்க அடிக்கவும்

  2. 2

    ஒரு பேக்கிங் கிண்ணத்தில் வெண்ணெய் தடவி வைத்து கொள்ளவும்

  3. 3

    முட்டையில் சுகர் பௌடர் சேர்த்து கலக்கவும் கூடவே எண்ணெய் மற்றும் பாலை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கலக்கவும்

  4. 4

    பின் அதில் மைதா மற்றும் கொக்கோ பவுடர் சேர்த்து பேக்கிங் பவுடர் சேர்த்து மெதுவாக கலந்து விடவும்

  5. 5

    பின் வெண்ணெய் தடவிய கிண்ணத்தில் கலந்த மாவை நிரப்பவும்

  6. 6

    ஒரு அடி கனமான பாத்திரத்தில் உப்பு கொஞ்சம் சேர்த்து மூடி போட்டு அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடு படுத்தவும் பின் அதன் உள்ளே கேக் மாவு நிரப்பிய கிண்ணத்தை வைத்து நன்றாக மூடி 30 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும் நீங்கள் இதற்கு குக்கரை தாராளமாக பயன்படுத்தலாம்

  7. 7

    30 நிமிடம் கழித்து திறந்து ஒரு கத்தி அல்லது குச்சியை விட்டு குத்தி பார்க்கவும் மாவு கத்தியில் ஒட்டாமல் வந்தால் கேக் ரெடி

  8. 8

    ஆற வைத்து துண்டுகளாக வெட்டி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Durga
Durga @cook_25671729
அன்று

Similar Recipes