மலாய் கோஃப்தா கிரேவி(Malai kofta gravy recipe in Tamil)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

#GA4 #week4 #gravy
எப்போதும் நாம் ஹோட்டல்களில் சென்று ஆர்டர் செய்யும் ரெசிபி இனி உங்கள் வீட்டிலேயே செய்யலாம்.

மலாய் கோஃப்தா கிரேவி(Malai kofta gravy recipe in Tamil)

#GA4 #week4 #gravy
எப்போதும் நாம் ஹோட்டல்களில் சென்று ஆர்டர் செய்யும் ரெசிபி இனி உங்கள் வீட்டிலேயே செய்யலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
4 பேர்
  1. 100 கிராம் பன்னீர்
  2. 2பெரிய உருளைக்கிழங்கு
  3. 2பச்சை மிளகாய்
  4. சிறிதளவுநறுக்கிய கொத்தமல்லித்தழை
  5. 1 டீஸ்பூன் கரம் மசாலா
  6. 1 டீஸ்பூன் ரெட் சில்லி பொடி
  7. 4 டீஸ்பூன் மைதா
  8. 2 டீஸ்பூன் கார்ன்ஃப்ளார் மாவு
  9. வறுத்து அரைக்க
  10. 2பட்டை,1 இலை,3 கிராம்பு, 2 ஏலக்காய்
  11. 6 மிளகு
  12. 1பெரிய வெங்காயம்
  13. 2தக்காளி
  14. 1 டீஸ்பூன் சீரகம்
  15. 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  16. கிரேவிக்கு
  17. 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  18. 1 டீஸ்பூன் பட்டர்
  19. 1 டீஸ்பூன் ரெட் சில்லி பவுடர்
  20. 11/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  21. 2டீ ஸ்பூன் தனியாத்தூள்
  22. 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  23. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    பனீரை துருவிக்கொள்ளவும் வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்துக் கொள்ளவும்.

  2. 2

    இப்போது உருளைக்கிழங்கு, பன்னீர்,நறுக்கின பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை, தூள் வகைகள் சிறிதளவு உப்பு, மைதா மாவு,சேர்த்து உருண்டைகள் பிடித்து வைக்கவும்

  3. 3

    கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிகான்பிளவர் மாவு டெஸ்ட் பண்ணி லோமீடியம் பிளேமில் ஒருபுறம் ஓரளவு வெந்த பின் திருப்பி போட்டு அதே அளவு வேக வைத்து எடுக்கவும்

  4. 4

    வறுத்து அரைக்க உள்ள பொருட்களை சேர்த்து வெங்காயம், முந்திரிப்பருப்பு சேர்த்து வதக்கி பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.

  5. 5

    ஆறினபின் அரைத்து வைக்கவும்.இப்போது அதை கடாயில் எண்ணெய்,பட்டர் சேர்த்து தூள் வகைகளை சேர்த்து சிம்மில் வைத்து இரண்டு நிமிடம் கிளறவும்.

  6. 6

    பின் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்கவைத்து மூடி போட்டு 5 நிமிடம் வெந்ததும் உருண்டைகளை சேர்க்கவும் ஒரு கொதி விட்டு இறக்கவும். சூடாக பரிமாறவும். சப்பாத்தி, பரோட்டா,வெஜிடபிள் ரைஸ்,போன்றவற்றுக்கு பொருத்தமாக இருக்கும்.*நான் பிரஷ் கிரீம் சேர்க்கவில்லை நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Azhagammai Ramanathan
அன்று

Similar Recipes