தேங்காய் ரவை கேசரி (Thenkaai ravai kesari recipe in tamil)

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

தேங்காய் ரவை கேசரி (Thenkaai ravai kesari recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20-30 நிமிடங்கள்
4-6 பரிமாறுவது
  1. 1 கப் ரவை
  2. 1/2 கப் தேசிக்கேட்டர் கோக்கனட்
  3. 1 கப் சர்க்கரை
  4. 4 டேபிள்ஸ்பூன் நெய்
  5. 1 டேபிள்ஸ்பூன் முந்திரி
  6. 1 டேபிள்ஸ்பூன் திராட்சை
  7. 2 கப் சுடு தண்ணீர்
  8. சிறிதுகலர் பவுடர்
  9. சிறிதுஏலங்காய் தூள்
  10. அலங்கரிக்க
  11. சிறிதுநறுக்கிய பாதாம், பிஸ்தா

சமையல் குறிப்புகள்

20-30 நிமிடங்கள்
  1. 1

    நெய் ஊற்றி முதலில் முந்திரி திராட்சையை வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும் பிறகு அதே நெய்யில் ரவையை சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் வறுக்கவும், ராபி வழிபட்ட பிறகு தேங்காய்த் துருவல் சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும்

  2. 2

    சுடு தண்ணீர் சேர்த்து கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்

  3. 3

    தண்ணீர் வற்றிய பிறகு இதில் விருப்பப்பட்டால் கலர் பவுடர், மற்றும் ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரையும் வரை கைவிடாமல் கிளறவும் இறுதியாக வறுத்து வைத்துள்ள திராட்சை முந்திரியை சேர்த்து 5 நிமிடம் மூடி குறைந்த தீயில் வைக்கவும்

  4. 4

    நெய் பிரிந்து வெளியேறி வரும்போது மீண்டும் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து ஒரு முறை கிளறவும்

  5. 5

    பரிமாறும் பொழுது விருப்பப்பட்டால் நறுக்கிய பாதாம் பிஸ்தா சேர்த்து பரிமாறவும்... சுவையான தேங்காய் ரவை கேசரி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes