பச்சை பட்டாணி தேங்காய் பால் சாதம்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#coconut
பச்சை பட்டாணி அதிகமாகவும் கேரட் பீன்ஸ் குறைவாகவும் சேர்த்து தேங்காய் பாலில் செய்த சாதம். முழுவதும் தேங்காய் பாலில் செய்தேன்.தண்ணீர் கொஞ்சம் கூட சேர்க்காமல் தேங்காய்ப்பாலில் செய்வதால் நிறைய சாப்பிட முடியாது. திகட்டும். எனவே எப்போதும் செய்யும் அளவிற்கு குறைவாகவே செய்து கொள்ளவும்.அல்லது தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து கூட நீங்கள் செய்து கொள்ளலாம்.

பச்சை பட்டாணி தேங்காய் பால் சாதம்

#coconut
பச்சை பட்டாணி அதிகமாகவும் கேரட் பீன்ஸ் குறைவாகவும் சேர்த்து தேங்காய் பாலில் செய்த சாதம். முழுவதும் தேங்காய் பாலில் செய்தேன்.தண்ணீர் கொஞ்சம் கூட சேர்க்காமல் தேங்காய்ப்பாலில் செய்வதால் நிறைய சாப்பிட முடியாது. திகட்டும். எனவே எப்போதும் செய்யும் அளவிற்கு குறைவாகவே செய்து கொள்ளவும்.அல்லது தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து கூட நீங்கள் செய்து கொள்ளலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பேர்
  1. அரை கப் பாஸ்மதி அரிசி
  2. சிறியதேங்காயில் அரை மூடி தேங்காய்த்துருவல்.(1 கப் பால்)
  3. 3 பச்சை மிளகாய்
  4. 1/2அளவு பெரிய வெங்காயம் நீளவாக்கில் நறுக்கவும்
  5. ஒரு டேபிள்ஸ்பூன் பொடியாக அரிந்தது
  6. ஒரு டேபிள்ஸ்பூன் கேரட் பொடியாக அரிந்தது
  7. மல்லி மொட்டு அன்னாசி மொக்கு பட்டை கிராம்பு ரோஜா மொக்கு ஏலக்காய்
  8. Each one
  9. 7 முந்திரி பருப்பு
  10. ஒரு ஸ்பூன் நெய்
  11. ஒரு ஸ்பூன் ஆயில்
  12. 1பிரியாணி இலை
  13. ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  14. கொஞ்சம்புதினா தழை
  15. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மேற்கூறிய தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.சிறிய தேங்காய் ஒன்றை எடுத்து அதில் ஒரு மூடி அளவுக்கு தேங்காய் துருவி மிக்ஸியில் அரைத்து இரண்டு முறை பால் எடுத்து கொள்ளவும். காய்கறிகளை பொடியாக அரிந்து கொள்ளவும். பச்சை பட்டாணி கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்..எல்லாவற்றையும் ரெடி செய்து விட்டு பாஸ்மதி அரிசியை கால் மணி நேரம் ஊற வைத்தால் போதும்.

  2. 2

    ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானவுடன் மசாலா பொருட்கள், முந்திரி பருப்பு நீளவாக்கில் அரிந்த வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சிபூண்டு விழுது, கேரட், பீன்ஸ், பட்டாணி சேர்த்து லேசாக வதக்கவும். நிறம் மாறாமல் வதக்கிக்கொள்ளவும். பச்சை வாசம் போனால் போதும்.அரிசியை தண்ணீர் வடித்து இதில் சேர்த்து கொஞ்சம் சூடு செய்து கலந்து கொள்ளவும்.

  3. 3

    படத்தில் காட்டியபடி அரிசி காய்கறிகளை நன்கு கலந்து பின் ஒரு நிமிடம் சூடேற்றவும். பிறகு தேவையான உப்பு சேர்க்கவும். அதன் பிறகு அரை கப் அளவிற்கு 1 கப் தேங்காய்ப்பால் சேர்த்து கொள்ளவும்.(1:2). தேங்காய் பால் போதவில்லை என்றால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். நன்கு கலந்து விட்டு இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி குக்கரில் வைத்து இரண்டு சவுண்ட் விடவும். தொடர்ந்து 5 நிமிடம் அடுப்பை சிம்'மில் வைத்து பிறகு அடுப்பை நிறுத்தி விடவும்.

  4. 4

    ஆவி நன்கு அடங்கிய பின் குக்கரை திறந்து சாதம் உள்ள பாத்திரத்தை வெளியில் எடுக்கவும். ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளவும். முள் கரண்டி அல்லது வேறு கரண்டி கொண்டு மெதுவாக நன்கு கலந்து விடவும். சாதம் குழையாமல் கலந்து கொள்ளவும்.தொட்டுக்கொள்ள தயிர் பச்சடி அல்லது ஏதாவது ஒரு புலாவ் கிரேவி செய்து கொள்ளவும்.இந்தத் தேங்காய் பால் சாதம் திகட்டும் என்பதால் இதற்கு கொஞ்சம் காரமாக ஏதாவது கிரேவி செய்து கொள்ளவும். சாப்பிட நன்றாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes