உடனடி கோதுமைமாவு ஹல்வா (Udanadi kothumai maavu halwa recipe in tamil)

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

உடனடி கோதுமைமாவு ஹல்வா (Udanadi kothumai maavu halwa recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1கப்கோதுமை மாவு
  2. 1 1\2கப்சீனி
  3. முந்திரி பருப்பு-8
  4. பாதாம்-5
  5. 1\2கப்நெய்
  6. சிகப்பு ஃபுட் கலர்-1பின்ச்
  7. 21\2கப்தண்ணீர்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் சிறிதளவு நெய் விட்டு முந்திரிப்பருப்பை வறுத்து தனியே எடுத்துக்கொள்ளவும்

  2. 2

    அதே கடாயில் கோதுமை மாவை சேர்த்து மிதமான தீயில் வைத்து வாசம் வரும் வரை கோதுமை மாவை வறுக்கவும்

  3. 3

    வறுத்த மாவு நன்கு ஆறியதும் 2 1\2கப் தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்

  4. 4

    அடி கனமான கடாயில் கரைத்த மாவை ஊற்றி மிதமான தீயில் வைத்து கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்

  5. 5

    மாவு வெந்து சிறிது கெட்டி பதம் வந்ததும் சீனியை சேர்த்து கிளறவும். நன்கு சீனி கரைந்து சுருண்டு பதம் வரும் வரை கிளறவும்

  6. 6

    சிகப்பு ஃபுட் கலரை சிறிதளவு தண்ணீரில் கரைத்து அதனுடன் சேர்த்து கிளறவும்

  7. 7

    பிறகு நெய் சேர்த்து நன்கு ஒட்டாமல் சுருண்டு வரும் வரை கிளறி விடவும்

  8. 8

    பிறகு ஒரு தட்டில் நெய்யை தடவி ஹல்வாவை மாற்றவும்

  9. 9

    இறுதியாக வறுத்த முந்திரிப் பருப்பு, பொடித்த பாதாம் தூவி அலங்கரிக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes