உருளை கிழங்கு நோக்கி (Gnocchi (Urulaikilanku gnocchi recipe in tamil)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

இது ஒரு சுவையான இத்தாலியன் ரெஸிபி. வெளி நாட்டு ரேசிபிக்கள் தமிழ் நாட்டில் இப்பொழுது எங்கேயும் செய்கிறார்கள். இந்த ரெசிபி செய்கிறார்களோ, இல்லயா என்று எனக்கு தெரியாது. இது செய்வது எளிது. சின்ன பசங்க விரும்பி சாப்பிடுவார்கள். என் தோட்டத்தில் எல்லா சமையல் மூலிகைகளும் வளர்கின்றன.சே ஜ் கிடைக்கவிட்டால் பேசில் உபயோகிக்கலாம். #flour1

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30  நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 2கப் வேகவைத்து துருவிய (மேஷ்ட்) உருளை
  2. 1/2கப் ஆல் பர்ப்பஸ் என்றிச்ட் கோதுமை மாவு கூட 1 மேஜைக்கரண்டி
  3. 1/4கப் பார்மேசன் சீஸ்
  4. 1/2தேக்கரண்டி ஜாதிக்காய் பொடி
  5. 1/2தேக்கரண்டி அல்லது தேவையான உப்பு
  6. 2மேஜைகரண்டி ஆலிவ் ஆயில்
  7. 1மேஜைகரண்டி சேஜ் (sage) இலைகள் பொடியாக நறுக்கியது
  8. 1மேஜைகரண்டி பூண்டு, பொடியாக நறுக்கியது
  9. 1மேஜைகரண்டி சிகப்பு மிளகாய், நசுக்கியது
  10. பிரிவு உருளை கிழங்கு நோக்கி

சமையல் குறிப்புகள்

30  நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க.

  2. 2

    உருளைக்கிழங்கை குக்கரில் வேகவைக்க. குழைய வைக்காதீர்க்கள். தோலுரித்து துருவிக்கொள்ளுங்கள். துருவலை ரேபிரிஜேடரில் சில மணி நேரங்கள் குளிரவைக்க. நான் ஓவெர்நைட் வைத்தேன்.
    ஒரு பிளாஸ்டிக் மேட் அல்லது ட்ரே மேல் துருவலை ஒரு லேயர் பரப்பி வைக்க. மேலே மாவு, 1 மேஜை கரண்டி சீஸ், உப்பு, நட் மேக் தூவிக்கொள்ளுங்கள் சின்ன துருவியால் நட் மேக் துருவிக்கொள்ளுங்கள். ஜாக்கிரத்தையாய் மெதுவாய் எல்லாவற்றையும் போர்க்கால் ஒன்று சேர்க்க. 2 கைகளாலும் நீட் செய்க. அதிகமாக நீட் செய்யாதீர்கள். ஒரு பால் (ball) செய்க.

  3. 3

    வெட்டினால் பிரட் ஸ்லைஸ் போல டெக்ஸர் (trxture) இருக்க வேண்டும். சிறிது மாவு மேட் மேல் தூவி இதை ரோல் செய்க. ஒரு தடி கயிறு போல—சப்பாத்தி மாவில் ஸ்னேக் செய்வது போல. கத் தியால் 1 அங்குலம் துண்டு செய்க.
    துண்டு மேல் போர்க் பின் பக்கத்தை வைத்து கோடு போடுங்கள்.

  4. 4

    ஹை பிளெமின் மேல் ஒரு பாத்திரத்தில் உப்பு சேர்த்த தண்ணீர் கொதிக்க வைக்க. நோக்கி துண்டுகளை இதில் சேர்க்க. நெருப்பை குறைக்க. வெந்ததும் நோக்கிகள் மேலே மிதந்து வரும். மிதந்து வரும் நோக்கிகளை வலை கரண்டியால் எடுத்தால் நீர் வடிந்துவிடும்.
    மிதமான நெருப்பின் மேல் ஒரு ஸ்கிலெட்டீல் ஆலிவ் ஆயில் சூடு செய்க. சேஜ், வெங்காயம், சேர்த்து வதக்க. 2 நிமிடங்கள் கழித்து பூண்டு, மிளகாய் சேர்க்க. நோக்கிகளை இப்பொழுது இதில் சேர்க்க. டாஸ் செய்க.

  5. 5

    2 நிமிடங்கள் கழித்து ஒரு சின்ன குழிகரண்டியால் நோக்கிகள் வெந்த நீரை எடுத்து ஸ்கிலெட்டீல் சேர்த்து டாஸ் செய்க. மீதி சீஸ் துருவல் மேலே தூவுக. பெப்பர் மில் உபயோகித்து மிளகு பொடி தூவுக. நோக்கிகள் ருசிக்க தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes