ரவா லட்டு (Rava laddu recipe in tamil)

Mangala Meenakshi
Mangala Meenakshi @cook_26918056

#ilovecooking மாலை நேர சிற்றுண்டிக்கு சிறந்த இனிப்பு குறுகிய நேரத்திலேயே செய்து கொடுக்கலாம். வீட்டில் இருக்கும் பொருட்களை அவசர தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

ரவா லட்டு (Rava laddu recipe in tamil)

#ilovecooking மாலை நேர சிற்றுண்டிக்கு சிறந்த இனிப்பு குறுகிய நேரத்திலேயே செய்து கொடுக்கலாம். வீட்டில் இருக்கும் பொருட்களை அவசர தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  1. 1 கப் ரவா
  2. 3/4 கப் படித்த சக்கரை
  3. ஏலக்காய் தூள் சிறிதளவு
  4. 10 பாதாம் அல்லது முந்திரி
  5. 100 கிராம் நெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ரவையை ஒரு வாணலியில் நன்றாக வாசம் வரும் வரை சற்று பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். நன்றாக ஆறவிடவும். முக்கால் கப் சர்க்கரையை மிக்சி ஜாரில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஆறிய வறுத்த ரவையை மிக்ஸியில் போட்டு லேசாக கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்.பின்பு சர்க்கரையையும் ரவையையும் சேர்த்து நன்றாக ஒரே கலவையாக்கி கொள்ளவும்.

  3. 3

    வாணலியில் நெய் விட்டு நன்றாக சூடேறி உருகியதும் கலவையில் ஊற்றி பிசைந்து சிறு உருண்டைகளாக்கி பிடிக்கவும்.

  4. 4

    பின்பு பாதாம் அல்லது முந்திரியை அலங்கரித்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Mangala Meenakshi
Mangala Meenakshi @cook_26918056
அன்று

Similar Recipes