வெஜிடபிள் புலாவ் (Vegetable pulao recipe in tamil)

Mishal Ladis
Mishal Ladis @cook_25648483

#GA4 Week 8

வெஜிடபிள் புலாவ் (Vegetable pulao recipe in tamil)

#GA4 Week 8

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பேர்
  1. 2 கப்பாஸ்மதி அரிசி
  2. 1/2 கப் கேரட்
  3. 1/2 கப் பட்டாணி
  4. 1/4 கப் முந்திரிப் பருப்பு
  5. 1 கப் பெரிய வெங்காயம்
  6. 2 பச்சை மிளகாய்
  7. 2 தேக்கரண்டி நெய்
  8. 3 பீஸ் ஏலக்காய்
  9. 3பீஸ் கிராம்பு
  10. 1 இன்ச் பட்டை
  11. 2பிரியானி இலை
  12. 1 தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது
  13. 1 தேக்கரண்டி மிளகு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கனமான பாத்திரத்தில் நெய், 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானவுடன், மிளகு, கிராம்பு, பட்டை, ஏலக்காய், பிரியானி இலை சேர்க்கவும்

  2. 2

    இவை பொறிந்தவுடன் முந்திரிப் பருப்பு சேர்த்து வதக்கவும் பின் வெங்காயம், கேரட், பட்டாணி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்

  3. 3

    பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

  4. 4

    பின் இதனுடன் (1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர்) தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்

  5. 5

    நன்றாக கொதி வந்தவுடன் கழுவி ஊறவைத்த அரிசியை சேர்க்கவும்

  6. 6

    அரிசி சேர்த்த பின் ஸ்டவை சிம்மில் வைத்து பாத்திரத்தை இருக்கமாக மூடவும்

  7. 7

    சிறிது நேரம் கழித்து சோற்றின் பதம் பார்த்து இறக்கவும் இப்போது சுவையான வெஜிடபில் புலாவ் தயார்

  8. 8

    இதை சிறிது கொத்தமல்லி தழை, வெங்காய ரிங்ஸ் தூவி பரிமாரவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mishal Ladis
Mishal Ladis @cook_25648483
அன்று

Similar Recipes