தட்டுவடை செட் (ThattuVadai Set recipe in tamil)

Shalini Prabu
Shalini Prabu @cook_17346945

#Kids1 #snack குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த தட்டுவடை செட் செய்யலாம் வாங்க.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
2 நபர்
  1. 4 பூண்டு
  2. 5 சின்ன வெங்காயம்
  3. 1 காய்ந்த மிளகாய் (காரத்திற்கு ஏற்றது போல்)
  4. 6 தட்டுவடை
  5. 2 ஸ்பூன் துருவிய கேரட்
  6. 2 ஸ்பூன் துருவிய பீட்ரூட்
  7. நறுக்கிய வெங்காயம்
  8. நறுக்கிய கொத்தமல்லி
  9. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    முதலில் இந்த ரெசிபிக்கு உடனடி சட்னி செய்யலாம்.மிக்ஸி ஜாரில் காரத்திற்கு ஏற்ற மிளகாய் 4 பூண்டு சின்ன வெங்காயம் சேர்க்கவும்.

  2. 2

    தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.பிறகு இதனுடன் 1 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்தால் சட்னி ரெடி.

  3. 3

    தட்டுவடை மேல் தயார் செய்த சட்னி 1/2 ஸ்பூன் வைக்கவும்.

  4. 4

    இதன் மேல் துருவிய கேரட் துருவிய பீட்ரூட் நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லி வைத்து கொள்ளவும்.

  5. 5

    பிறகு மறுபடியும் சட்னி வைத்த தட்டுவடை மேலே வைத்து மூடினால் தட்டு வடை செட் தயார்.

  6. 6

    5 நிமிடத்தில் தட்டுவடை செட் தயார் !!!

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shalini Prabu
Shalini Prabu @cook_17346945
அன்று

Similar Recipes