சத்துமாவு புட்டு (sathumaavu puttu recipe in tamil)

Shalini Prabu
Shalini Prabu @cook_17346945

#GA4 #steamed குறைவான நேரத்தில் செய்ய கூடிய ரெசிபி புட்டு.இதில் ஆரோக்கியமான சத்துமாவு வைத்து புட்டு செய்யலாம் வாங்க.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
3 நபர்
  1. 1 கப் சத்துமாவு
  2. 4 ஸ்பூன் தேங்காய் துருவல்
  3. 2 ஸ்பூன் சர்க்கரை
  4. 1/2 ஸ்பூன் உப்பு
  5. வாழைப்பழம் தேவைக்கேற்ப
  6. 1/4 ஸ்பூன் ஏலக்காய் தூள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    முதலில் சத்துமாவை கடாயில் சேர்த்து 2 நிமிடம் வறுத்து கொள்ளவும்.

  2. 2

    தேவையான அளவு உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.

  3. 3

    கையில் பிடித்தால் கொழுக்கட்டை பதத்திற்கும் உதிர்த்து விட்டால் தூளாகும் அளவுக்கு இருக்க வேண்டும்.

  4. 4

    இப்பொழுது இதை ஒரு இட்லி தட்டில் துணி போட்டு அதன் மேல் புட்டு மாவை சேர்த்து 5 நிமிடம் ஆவியில் வேக வைக்க வேண்டும்.

  5. 5

    5 நிமிடம் கழித்து வெந்தவுடன் இதை ஒரு பாத்திரத்தில் மாற்றி இதனுடன் சர்க்கரை தேங்காய் துருவல் சிறிது ஏலக்காய் தூள் சேர்த்து கலந்தால் புட்டு ரெடி.

  6. 6

    அப்படியே பரிமாறலாம்.அல்லது 1 ஸ்பூன் நெய் சேர்த்து உருண்டைகளாக பிடித்து பரிமாறலாம்.

  7. 7

    அல்லது 1 வாழைப்பழத்தை மசித்து இதனுடன் சேர்த்து பரிமாறலாம்.

  8. 8

    சத்துமாவு புட்டு தயார் !!

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shalini Prabu
Shalini Prabu @cook_17346945
அன்று

Similar Recipes