பெங்காலி ஸ்வீட் (Bengali sweet recipe in tamil)

Prabha muthu
Prabha muthu @cook_597599

#deepfry #photo இத நீங்க செஞ்சு பாருங்க ரொம்ப ஈசி ரொம்ப டேஸ்டி👍

பெங்காலி ஸ்வீட் (Bengali sweet recipe in tamil)

#deepfry #photo இத நீங்க செஞ்சு பாருங்க ரொம்ப ஈசி ரொம்ப டேஸ்டி👍

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
4பேர்
  1. ஒரு கப்கோதுமை மாவு
  2. ஒரு கப்சர்க்கரை
  3. நாலு ஸ்பூன்நெய்
  4. அரை ஸ்பூன்பேக்கிங் சோடா
  5. 4ஏலக்காய்
  6. 2 ஸ்பூன்பால் பவுடர்
  7. உப்பு ஒரு சிட்டிகை
  8. எண்ணெய் பொரிக்க தேவையான அளவு
  9. முட்டை ஒன்று

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    முட்டையை உடைத்து ஊற்றிக் கொள்ளவும் 4 ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு கப் சர்க்கரையில் கால் கப் சர்க்கரையை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் ஏலக்காயும் சேர்த்து நன்றாக பொடித்து கொள்ளவும்

  3. 3

    முட்டை மற்றும் நெய் கலவையில் பொடித்த சர்க்கரையை சேர்த்து நன்றாக கரண்டியால் கலந்து விடவும்

  4. 4

    மூன்றையும் நன்றாக கலக்கிய பிறகு அதில் பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து ஒரு கப் கோதுமை மாவு பால் பவுடர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்

  5. 5

    இவற்றை சிறு உருண்டைகளாக உருட்டி நடுவில் உங்களுக்கு தேவையான டிசைன்களை செய்து கொள்ளலாம்

  6. 6

    சர்க்கரை நன்றாக கரையும் வரை கொதிக்க விடவும் சர்க்கரை கரைந்து ஐந்து நிமிடம் கொதித்தால் மட்டும் போதும்

  7. 7

    செய்து வைத்திருக்கும் உருண்டைகளை கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் அவற்றை பொரித்து எடுக்க வேண்டும் அடுப்பை குறைவான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும் இல்லையென்றால் உட்புறம் வெந்து இருக்காது

  8. 8

    இவற்றை செய்து வைத்திருக்கும் சர்க்கரை பாகில் சூடாக போட்டு பத்து நிமிடங்களில் வெளியே எடுத்துவிட வேண்டும்

  9. 9

    இந்த ஸ்வீட் மிகவும் சுவையாக இருக்கும் கோதுமை மாவில் செய்வதால் ஹெல்தியான ஜுஸியான ஸ்வீட் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Prabha muthu
Prabha muthu @cook_597599
அன்று

Similar Recipes