தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
10 நபர்
  1. 2 கப் பால்
  2. 1\2 கப் சர்க்கரை
  3. 1\2 கப் சோளமாவு
  4. 2 ஸ்பூன் மைதா மாவு
  5. தேவையானஅளவு ரஸ்க் தூள்
  6. தேவையானஅளவு தண்ணீர்
  7. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முதலில் 1\2 கப் சோளமாவு,1\2 கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்

  2. 2

    பின் அதில் பாலை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்

  3. 3

    அதை லோ பிளேமில் நன்கு கலக்கிக் கொண்டு இருக்கவும் கீழுள்ள படத்தின் பதத்திற்கு வந்த பிறகு இதிலிருந்து அடுப்பிலிருந்து எடுத்து விடவும்,ஆற வைத்து ஒரு தட்டில் பட்டர் பேப்பர் வைத்து அதற்கு மேல் ஊற்றவும்

  4. 4

    இரண்டு மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து அதை விருப்பத்திற்கு ஏற்ற வடிவில் நறுக்கிக் கொள்ள வேண்டும்

  5. 5

    பின் இரண்டு ஸ்பூன் மைதா 2 ஸ்பூன் சர்க்கரை தண்ணீர் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்

  6. 6

    நறுக்கியதை எடுத்து மைதாவில் புரட்டி ரஸ்க் தூளில் புரட்டி எடுக்க வேண்டும்

  7. 7

    அதை 15 நிமிடம் ஃப்ரீஸரில் வைக்க வேண்டும் அதை எண்ணெயில் போடவும்

  8. 8

    அதை இரண்டு பக்கமும் நன்கு வறுத்து எடுக்கவும் ஃப்ரைடு மில்க் ரெடி...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shuraksha Ramasubramanian
அன்று

Similar Recipes