தேவையான பொருட்கள்

25  நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1கப் கடலைமாவு
  2. 1/4கப் அரிசி மாவு
  3. 1/2ஸ்பூன் சீரகம்
  4. 1ஸ்பூன் மிளகு
  5. 1/2ஸ்பூன் உப்பு
  6. 1/4ஸ்பூன் சோடா உப்பு
  7. 2டேபிள்ஸ்பூன் நெய்
  8. 1/2ஸ்பூன் மிளகாய் தூள்
  9. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

25  நிமிடம்
  1. 1

    ஒரு பவுலில் கடலைமாவு, அரிசி மாவு சலித்து எடுத்து கொள்ளவும்.இதில் மிளகாய் தூள், உப்பு, சோடா உப்பு சேர்த்து கொள்ளவும்.

  2. 2

    மிளகு, சீரகம் இவற்றை கொரகொரப்பாக தட்டி இதில் சேர்த்து கொள்ளவும்.பிறகு நெய்ஐ சூடு செய்து இந்த கலவையில் ஊற்றி கலந்து விடவும்.

  3. 3

    தண்ணீர் லேசாக சூடு செய்து இந்த மாவில் ஊற்றி சிறிதளவு இலக்கமாக பிசைந்து கொள்ளவும்.ஜல்லி கரண்டியில் இரண்டு பக்கமும் எண்ணெய் தடவி வைக்கவும்.

  4. 4

    அடுப்பில் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு கையில் கரண்டியை பிடித்து கொண்டு மறு கையால் மாவை கரண்டி மையத்தில் வைத்து தேய்த்து விடவும். கரண்டியின் மறுபக்கம் ஓட்டை வழியாக மாவு வெளியே வந்து எண்ணெயில் விழும் படி தேய்க்கவும்.பார்த்து நிதானமாக செய்யவும்.

  5. 5

    பிறகு சேவு வெந்ததும் சலசலப்பு சத்தம் இல்லாமல் இருக்கும் போது சேவை எண்ணெயில் இருந்து எடுத்து கொள்ளவும். சூடு தணிந்த பின்னர் காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். சுவையான காராசேவு தயார். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes