மினி மசால் இட்லி (Mini Masal Idly recipe in tamil)

Nithya Sharu
Nithya Sharu @nithya_20

#GA4
#steamed
#Week8

மினி இட்லியில் இட்லி பொடி சேர்த்து ஒரு மசாலா கலவை செய்தேன். இதன் சுவை நன்றாக இருந்தது. குழந்தைகளுக்கு இது மாதிரி மினி இட்லி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் .அதனால் இது மாதிரி மினி இட்லி செய்து கொடுக்கலாம்.

மினி மசால் இட்லி (Mini Masal Idly recipe in tamil)

#GA4
#steamed
#Week8

மினி இட்லியில் இட்லி பொடி சேர்த்து ஒரு மசாலா கலவை செய்தேன். இதன் சுவை நன்றாக இருந்தது. குழந்தைகளுக்கு இது மாதிரி மினி இட்லி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் .அதனால் இது மாதிரி மினி இட்லி செய்து கொடுக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 பேர்
  1. ஒரு கப் இட்லி மாவு
  2. ஒரு பெரிய வெங்காயம்
  3. ஒரு தக்காளி
  4. குடைமிளகாய்நருக்கியது சிறிதளவு
  5. 3 ஸ்பூன் இட்லி பொடி
  6. 2 டேபிள் ஸ்பூன் நெய்
  7. ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
  8. தேவையான அளவு
  9. கருவேப்பிலை மல்லித்தழை சிறிதளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைக்கவும். அதில் மினி இட்லி தட்டில் ஒரு ஸ்பூன் எண்ணெய் தடவி இட்லி மாவை ஊற்றவும்.பின் அதை வேக வைக்கவும். இட்லி வெந்தவுடன் ஆற வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    பிறகு தேவையான வெங்காயம்,சிறிது குடைமிளகாய்,தக்காளி, இவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றவும்.அதில் வெங்காயம், தக்காளி, குடை மிளகாய் இவற்றை ஒன்றாக போட்டு வதக்கவும் அதில் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

  3. 3

    எல்லாம் நன்றாக வதங்கிய பின் மினி இட்லியை போடவும். லேசாக பிரட்டி விட்டு அதன்மேல் மூன்று ஸ்பூன் இட்லி பொடியை தூவவும். பிறகு அதன் மேல் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்க்கவும். கறிவேப்பிலை மல்லித்தழை சேர்த்து இறக்கவும்.

  4. 4

    இப்பொழுது மிகவும் சுவையான மசால் இட்லி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Nithya Sharu
Nithya Sharu @nithya_20
அன்று

Similar Recipes