கொய்யா இலை சீப்பு முறுக்கு (Koyya ilai seepu murukku recipe in tamil)

Teenu & Moni's Life
Teenu & Moni's Life @cook_27243006

இது எனக்கு மிகவும் பிடித்த பலகாரம் . நான் சிறு வயதில் ஒவ்வொரு தீபாவளிக்கும் என் அம்மாவிடம் இதை செய்து தரச்சொல்லி கேட்பேன். அவர் இதை தயார் செய்யும்போது நானும் அம்மாவின் அருகில் அமர்ந்து என்னால் முடிந்த உதவிகளை அவருக்கு செய்வேன் . எனக்கு அது மிகுந்த மகிழ்ச்சியை தரும் . இந்த வருட தீபாவளி பண்டிகைக்கு இந்த பலகாரத்தின் செய்முறையை #skvdiwali வாயிலாக அனைவருடனும் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி.

கொய்யா இலை சீப்பு முறுக்கு (Koyya ilai seepu murukku recipe in tamil)

இது எனக்கு மிகவும் பிடித்த பலகாரம் . நான் சிறு வயதில் ஒவ்வொரு தீபாவளிக்கும் என் அம்மாவிடம் இதை செய்து தரச்சொல்லி கேட்பேன். அவர் இதை தயார் செய்யும்போது நானும் அம்மாவின் அருகில் அமர்ந்து என்னால் முடிந்த உதவிகளை அவருக்கு செய்வேன் . எனக்கு அது மிகுந்த மகிழ்ச்சியை தரும் . இந்த வருட தீபாவளி பண்டிகைக்கு இந்த பலகாரத்தின் செய்முறையை #skvdiwali வாயிலாக அனைவருடனும் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 நபர்
  1. 1 கப் கம்பு மாவு (200 கிராம்)
  2. 1/2 கப் பொட்டுகடலை அல்லது பாசிப்பருப்பு மாவு (100 கிராம்)
  3. 1/4 கப் அரிசி மாவு (50 கிராம்)
  4. 1/2 மூடி தேங்காய் பால்
  5. 100 கிராம் சக்கரை
  6. ஒரு சிட்டிகை உப்பு
  7. எண்ணெய் (பொறிப்பதற்கு ஏற்ப எடுத்துக்கொள்ளவும்)
  8. 3 டீஸ்பூன்எள்ளு
  9. கொய்யா இலை ஐந்து

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் மேலே குறிப்பிட்டுள்ள மூன்று வகை மாவையும் எடுத்துக்கொள்ளவும். அதில் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் எள்ளு சேர்த்து கலந்துக்கொள்ளவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் தேங்காய் பால் மற்றும் சக்கரையை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். சக்கரை முழுவதுமாக கரைந்து தேங்காய் பால் கொதி வந்தபின் இறக்கிவிடவும்.

  3. 3

    பின்பு இந்த தேங்காய் பால் கலவையை நாம் எடுத்துவைத்திருக்கும் மாவில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கெட்டியாக பிசைந்துகொள்ளவும்.

  4. 4

    எடுத்துவைத்திருக்கும் கொய்யா இலைகளை நன்கு அலசி சுத்தம் செய்து அதன் பின்புறம் லேசாக எண்ணெய் தேய்த்துக்கொள்ளவும். இப்போது நாம் செய்து வைத்திருக்கும் மாவை சிறு உருண்டைகளாக எடுத்து இந்த இலையின் பின்புறம் வைத்து தட்டிக்கொள்ளவும்.

  5. 5

    மெதுவாக இந்த மாவை இலையில் இருந்து கையின் விரல் கொண்டு சுருட்டி எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டு ஓரங்களையும் லேசாக அமித்திவிடவும். இப்போது நம் சீப்பு முறுக்கு கொய்யா இலையின் அச்சு பதிந்து தயாராக உள்ளது.

  6. 6

    ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து லேசாக காய்ந்தவுடன், செய்து வைத்திருக்கும் சீப்பு முறுக்குகளை அதில் சேர்த்து பொறித்து எடுக்க வேண்டும். இதை மிதமான தீயில் வைத்து செய்ய வேண்டும்.

  7. 7

    முறுக்கின் இரண்டு பக்கங்களும் நிறம் மாறியதும் அதை எடுத்து சூடாக பரிமாறுங்கள். சுவையான மொறு மொறு கொய்யா இலை சீப்பு முறுக்கு தயார். கம்பு மாவு சேர்த்து செய்வதால் இது உடலுக்கு மிகவும் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Teenu & Moni's Life
Teenu & Moni's Life @cook_27243006
அன்று

Top Search in

Similar Recipes