பாதுஷா (Bhadusha recipe in tamil)

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu

#ga4#week9#Maida

பாதுஷா (Bhadusha recipe in tamil)

#ga4#week9#Maida

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
4பேர்
  1. 2கப் மைதா
  2. 1/2கப் நெய்
  3. 1/4கப் தயிர்
  4. 1பின்ச் பேக்கிங் சோடா
  5. 1பின்ச் உப்பு
  6. 2கப் சர்க்கரை
  7. 1டீஸ்பூன் குங்குமப்பூ
  8. 1டீஸ்பூன் ஏலக்காய் பவுடர்
  9. தேவையானஎண்ணெய் பொரிப்பதற்கு
  10. 1/2மூடி எலுமிச்சம் பழம்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    ஒரு பேசினில் மைதா, பேக்கிங் சோடா, நெய், தயிர், உப்பு எல்லாவற்றையும் போட்டு கலந்து லேசாக பிசைந்து கொள்ளவும்.

  3. 3

    அதை சப்பாத்தி உருண்டை போல உருட்டி உள்ளங்கையில் வைத்து லேசாக வட்ட வடிவில் செய்து ஒரு விரலால் நடுவில் குழித்து வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    ஒரு கடாயில் எண்ணெய் வைத்து மிதமான சூட்டில் வைத்து பொரித்து எடுக்கவும்.

  5. 5

    இப்போது இன்னொரு வாணலியில் சர்க்கரை +தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து கொஞ்சம் திக்கான பாகு காய்ச்சி ஏலக்காய் பவுடர், குங்குமப்பூ சேர்த்து கடைசியாக எலுமிச்சை ஜூஸ் சேர்த்து விடவும்.

  6. 6

    இப்போது பொரித்து எடுத்த பாதுஷாக்களை சர்க்கரை பாகில் நன்கு மூழ்குமாறு போட்டு எடுத்து ஒரு தட்டில் அடுக்கி வைத்து பரிமாறவும்.

  7. 7

    எலுமிச்சை ஜூஸ் சேர்ப்பதால் சர்க்கரை பாகு கட்டி தட்டாமல் இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meenakshi Ramesh
அன்று

Similar Recipes