கிரில்டு சிக்கன் (Grilled chicken recipe in tamil)

AMUTHA R
AMUTHA R @cook_31150

கிரில்டு சிக்கன் (Grilled chicken recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2சிக்கன் லெக் பீஸ்
  2. 3 டேபிள் ஸ்பூன்மிளகாய்த்தூள்
  3. 1 டேபிள் ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  4. 2 டேபிள் ஸ்பூன்எலுமிச்சை சாறு
  5. 1/4 டீஸ்பூன்மஞ்சள் தூள்
  6. 1 டேபிள் ஸ்பூன்கரம் மசாலா
  7. 1/4 கப்தயிர்
  8. 1முட்டை
  9. உப்பு
  10. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சிக்கன் துண்டுகளை மஞ்சள் உப்பு சேர்த்து கழுவவும்.

  2. 2

    கழுவிய சிக்கன் துண்டுகளை கத்தி வைத்து 4 இடத்தில் நன்றாக வெட்டிக்கொள்ளவும்.

  3. 3

    தட்டில் மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள், கரம் மசாலா, தயிர், 1/2 முட்டை, தேவையான அளவு உப்பு,1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து ஒரு பேஸ்ட் செய்யவும்.

  4. 4

    செய்த பேஸ்டில் சிக்கன் துண்டுகளை போட்டு நன்றாக பிரட்டவும். சிக்கனில் வெட்டிய ஓட்டைகளில் மசாலா ஏறுமாறு நன்றாக தடவவும்.

  5. 5

    ஃப்ரிட்ஜில் 3 மணி நேரம் வைக்கவும்.

  6. 6

    பின் அதை வெளியே எடுத்து 15 நிமிடம் வைக்கவும்.

  7. 7

    பேக்கிங் தட்டில் பேக்கிங் சீட் ஒன்றைப் போட்டு அதன் மேல் சிக்கன் துண்டுகளை தனித்தனியாக அடுக்கவும்.

  8. 8

    அடுக்கிய சிக்கன் துண்டு மேல் மீதம் இருக்கும் 1/2 முட்டையை தடவி விடவும்.

  9. 9

    ஓவனில் 180°C இல் கிரில் மோடில் 30-45 நிமிடம் க்ரில் செய்து மயோனைஸ் உடன் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
AMUTHA R
AMUTHA R @cook_31150
அன்று

கமெண்ட் (2)

Similar Recipes