சர்க்கரை வள்ளக்கிழங்கு சாதம் (Sarkarai vallikilanku satham recipe in tamil)

#kids3
இந்த சாதம் குழந்தைகளுக்கு கட்டிக் கொடுத்தால் மிகவும் விருப்பத்துடன் சாப்பிடுவார்கள். சர்க்கரைவள்ளி கிழங்கு கொண்டு செய்த சாதம். கொஞ்சம் இனிப்பாக இருக்கும். அதனால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதனுடன் கேரட் மற்றும் குடைமிளகாய் சேர்த்து செய்தேன்.
சமையல் குறிப்புகள்
- 1
சர்க்கரை வள்ளிக்கிழங்கை மண் போக நன்கு கழுவி முக்கால் பதத்திற்கு வேகவைத்துக் கொள்ளவும். தோல் உரித்து துருவிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை சன்னமாக அரிந்து கொள்ளவும். குடை மிளகாயை பொடியாக அரிந்து கொள்ளவும். கேரட்டை துருவி வைத்துக் கொள்ளவும்.ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல் துருவி வைத்துக் கொள்ளவும். ஒன்று அல்லது காரத்திற்கேற்ப 2 பச்சை மிளகாய் அறிந்து கொள்ளவும். எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, நெய் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு நான்ஸ்டிக் கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, உளுந்து தாளிக்கவும். பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கவும். அதன் பிறகு கேரட் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். 3 நிமிடம் மூடி வைக்கவும்.. கேரட் சிறிது நிறம் மாறி வெந்து இருக்கும்.
- 3
இப்போது தேவையான அளவு தூள் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.பிறகு இதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து விடவும். ஒரு நிமிடம் கழித்து துருவிய சர்க்கரை வள்ளி கிழங்கை சேர்த்து நன்கு கலந்து விட்டு 2 நிமிடம் வரை வைத்திருக்கவும். மிதமான தீயில் செய்யவும்.
- 4
இப்போது வடித்து ஆற வைத்த சாதத்தை ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து காயுடன் கலந்து விடவும். கொத்தமல்லி கருவேப்பிலை பொடியாக அரிந்து சேர்க்கவும்.
- 5
சுவையான சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாதம் லஞ்ச் பாக்ஸ் ரெடி. தொட்டுக்கொள்ள அப்பளம் அல்லது வடகம், அல்லது சிப்ஸ் எடுத்துக் கொள்ளவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
அரை கீரை பாசி பருப்பு சாதம் (Araikeerai paasiparuppu satham recipe in tamil)
#kids3கூட்டு,பொரியல் ஆக கீரை செய்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் இது போல் காரம் கம்மியாக நெய் சேர்த்து சாதமாக கலந்து தொட்டுக் கொள்ள அவர்களுக்கு பிடித்தார் போல அப்பளம் வடகம் உடன் கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள். Meena Ramesh -
கருவேப்பிலை சாதம்
#kids3மிக எளிதாக விரைவில் செய்யக்கூடிய சாதம். கருவேப்பிலை மிகவும் உடலுக்கு நல்லது.கறிவேப்பிலையை எந்த உணவில் சேர்த்தாலும் பெரியவர் முதல் குழந்தைகள் வரை எடுத்துப் போட்டுவிட்டு சாப்பிடுவார்கள். கருவேப்பிலை சாதம் ஆக செய்து கொடுத்தால் கறிவேப்பிலையில் உள்ள எல்லா நற்குணங்களும் உடலுக்குvசென்று சேரும். அதுமட்டுமன்றி மிகவும் வாசமாக சுவையாக இருக்கும். Meena Ramesh -
கிழங்கு வகைகள் குழம்பு
#kids3கருணை கிழக்கு, சேனை கிழங்கு மற்றும் சேப்பங்கிழங்கு சேர்த்து செய்த பருப்பு குழம்பு.எனக்கு இந்த குழம்பு மிகவும் பிடிக்கும். குழந்தைகள் பொதுவாக இந்த வகை கிழங்கு வகைகளை சாப்பிடமாட்டார்கள்.இதுபோல் குழம்பில் பொடியாக அரிந்து சேர்த்து நன்கு பிசைந்து கொடுத்து விட்டால் அவர்களுக்கு தெரியாது. நன்றாக இருப்பதால் சாப்பிட்டு விடுவார்கள். Meena Ramesh -
மா இஞ்சி எலுமிச்சை சாதம் (Maa inji elumichai satham recipe in tamil)
#varietyஎலுமிச்சை சாதம் என்றாலே குழந்தைகள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் பார்த்தவுடன் புளிப்பு இல்லாத மாங்காய் சுவையும் இஞ்சி சுவையும் கலந்த ஒரு அற்புதமான மாய்ந்து துருவி சேர்த்து எலுமிச்சை சாதம் கிளறினால் அலாதி சுவையுடன் அற்புதமாக இருக்கும் ஆகையால் இந்த ரெசிபியை நான் பகிர்கின்றேன் Santhi Chowthri -
பச்சரிசி எலுமிச்சை சாதம் 🍋 (Pacharisi elumichai satham recipe in tamil)
#poojaசுவாமி நைவேத்தியத்திற்கு எப்படி வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்ப்பது இல்லையோ அதேபோல் புழுங்கல் அரிசி சாதமும் சேர்க்க மாட்டோம். விரத நாட்களில் பச்சரிசி சாதம் மட்டுமே செய்வோம். மற்றும் வெறும் நாட்களில் புழுங்கல் அரிசியில் இதுபோன்ற கலவை சாதம் செய்வோம்.புழுங்கல் அரிசியை விட பச்சரிசியில் புளி சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், செய்யும் போது சுவை அதிகமாக இருக்கும். தயிர் சாதத்திற்கு பச்சரிசியை ஊற வைத்து பாலில் வேக வைத்து கொஞ்சமாக தயிர் சேர்த்து இஞ்சி கருவேப்பிலை கொத்தமல்லி பச்சை மிளகாய் பெருங்காயத்தூள் தாளித்து சாதம் கலந்தால் மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
குடைமிளகாய் செஸ்வான் சாதம் (Capsicum schezwan rice recipe in tamil)
குடைமிளகாய் சாதத்துடன் வற்றல்,சிப்ஸ் அல்லது அப்பளம் சேர்த்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.#Kids3 #Lunchbox Renukabala -
ரசம் சாதம் (Rasam satham recipe in tamil)
#onepotஇந்த மாதிரி ரசம் சாதம் எனக்கு ரொம்ப பிடிக்கும். எப்போதோ ஒரு முறை பெங்களூர் இஸ்கான் கோவிலில் இதை பிரசாதமாக சாப்பிட்டிருக்கிறேன். அந்த சுவையை ஞாபகம் வைத்து இன்று இந்த ரசம் சாதம் செய்தேன். குழந்தைகளுக்கு நாம் ஊட்டிவிடும் உப்பு பருப்பு சேர்த்த ரசம் சாதம் தான் இது. Meena Ramesh -
Potato stuffed shallow fry (Potato stuffed shallow fry recipe in tamil)
#flour1கோதுமை மாவில் செய்த உருளை கிழங்கு ஷால்லோ பிரை. Meena Ramesh -
நெய் நெல்லிக்காய் சாதம் (Nei nellikkaai satham recipe in tamil)
#cookwithmilk நெல்லிக்காய் மற்றும் நெய் அபரிமிதமான சத்துக்கள் நிறைந்த பொருட்கள். இதை சாதமாக இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். புளிப்பு சுவை பிடிக்கும் என்றால் கண்டிப்பாக இந்த ரெசிபியை செய்து பாருங்கள். வித்தியாசமான சுவையுடன் நல்ல ஆரோக்கியமான நெய் நெல்லிக்காய் சாதம் Poongothai N -
தேங்காய் சாதம்(thengai satham recipe in tamil)
#Varietyriceபெரும்பாலான குழந்தைகள் குழம்பு சாதத்தை விட கலவை சாதத்தை விரும்பி சாப்பிடுவார்கள் அதில் நாம் சத்தான பருப்புகள் தேங்காய் மற்றும் சேர்த்து கொடுக்கும்பொழுது பிள்ளைகளுக்கு செலுத்தி அண்ணா ஒரு உணவாகும் குறிப்பாக இது சாதம் மட்டும் வடித்து விட்டால் போதும் ஐந்து நிமிடத்தில் ரெடி ஆகிவிடும் Sangaraeswari Sangaran -
*தேங்காய் சாதம்*(coconut rice recipe in tamil)
#JPகாணும் பொங்கலுக்கு கலந்த சாதம் செய்வது வழக்கம். நான் செய்த தேங்காய் சாதம் ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
கேரட் சட்னி🥕🌶️
#czarrot #bookகேரட் வைத்து செய்த சட்னி. இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள மிக மிக சுவையாக இருந்தது. நீங்களும் ஒருமுறை இதனை முயற்சி செய்து பார்க்கலாம்.கண்டிப்பாக இந்த கேரட் சட்னி இன்சுவை உங்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் ❤️. கேரட் சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் இந்த சட்னியை விரும்பி சாப்பிடுவார்கள். பூரி சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும். டிப்ஸ்:1. தோல் சீவிவிட்டு செய்யவும். சட்னிக்கு நல்ல நிறம் கிடைக்கும்.2. கொஞ்சம் காரம் அதிகமாக சேர்க்கவும். சுவை அலாதியாக இருக்கும். லஞ்ச் பாக்ஸ் க்கு ஏற்ற சட்னி. Meena Ramesh -
லெமன் சாதம்
#Lockdown2#book காய்கறி இல்லாத நாள் லெமன் சாதம் செய்தேன். இதற்கு நிகரானது எதுவுமில்லை. கலரைப் பார்த்தவுடனே பசங்கங்களுக்கு சாப்பிட பிடிக்கும். sobi dhana -
நெல்லிக்காய் சாதம் (Nellikai satham recipe in tamil)
#GA4 Week11 #Amla#Kids3 Week3விட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நெல்லிக்காயை சாப்பிடுவது அனைவருக்கும் பிடிக்காது. இதை சாதகமாக செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். Nalini Shanmugam -
குடைமிளகாய் சாதம் (kudaimilakai satham recipe in tamil)
#kids3குடைமிளகாயில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. குடைமிளகாய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எனவே குழந்தைகளுக்கு அடிக்கடி சாதமாக செய்து கொடுங்கள். Priyamuthumanikam -
* தேங்காய் சாதம்*(coconut rice recipe in tamil)
# made4ஆடி பெருக்கு அன்று கலந்த சாதம் செய்வது வழக்கம் அதில் தேங்காய் சாதம் கண்டிப்பாக இருக்கும். இந்த சாதம் செய்வது மிகவும் சுலபம்.சுவை ஆனதும் கூட. Jegadhambal N -
Raw onion carrot raitha (Raw onion carrot raitha recipe in tamil)
#Pongalஇந்த தயிர் பச்சடி சாம்பார் சாதம், சப்பாத்தி, பிரியாணி, தக்காளி சாதம், பரோட்டா மற்றும் வெறும் சாதத்தில் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும். என் மகனுக்கு மிகவும் பிடித்த தயிர் பச்சடி இது. புளிக்காத தயிரில் செய்ய வேண்டும். Meena Ramesh -
சுவையான மிளகோரை.... மிளகு சாதம்
#pepper . உடம்பு சோர்வு, காய்ச்சல், சளி இருக்கும்போது இந்த சாதம் சாப்பிட்டால் வாய்க்கு ருசியாவும் , நெஞ்சு சளி குறையவும், செரிமானத்துக்கும் ரொம்ப நல்லது.. Nalini Shankar -
பட்டாணி பீட்ரூட் சாதம்👫 (Pattani beetroot satham recipe in tamil)
#Kids3#Lunchboxபட்டாணி மற்றும் பீட்ரூட்டில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. பட்டாணியுடன் பீட்ரூட்டை சேர்த்து சாதமாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.👫👫 Shyamala Senthil -
சர்க்கரை வள்ளி கிழங்கு பொரியல்#GA4#WEEK11#Sweet potato
#GA4#WEEK11#Sweet potatoகுழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் A.Padmavathi -
கருவேப்பிலை சாதம்(curry leaves rice recipe in tamil)
#made4 நாம தினம் தினம் சமைக்கிறோம்.. சில நேரம் நமக்கு சோம்பேறித்தனமா ஒரு ஓய்வு தேவைப்படும்ல, அன்னைக்கு இந்த சாதம் ரொம்ப சரியா இருக்கு... ஐஞ்சே நிமிசம் போதும் இத கிளற..... சாதம் வடிக்குற நேரம் தனி, அப்பறம் ஐஞ்சு நிமிசத்துல, சாதம் எப்படி வேகும்னு என்ன கேக்கக்கூடாது 😁😁😁😁 Tamilmozhiyaal -
தேங்காய் சாதம் (Thenkaai satham recipe in tamil)
#goldenapron3#week19#இந்த மாதிரி தேங்காய் சாதம் செய்து பாருங்கள். நன்றாக இருக்கும். Narmatha Suresh -
கொண்டைகடலை சாதம்(Kondaikadalai Satham Recipe in Tamil)
#nutrient1புரத சத்து நிறைந்த முளைகட்டிய கொண்டைகடலை வைத்து செய்த சாதம். எளிதில் செய்து விடலாம் Sowmya sundar -
நார்த்தங்காய் சாதம் (Narthankai satham recipe in tamil)
பொதுவாக நாம் எலுமிச்சை பழத்தில் தான் கலவை சாதம் செய்வோம் நார்த்தங்காய் பயன்படுத்துவது மிகவும் குறைந்தே காணப்படும். நார்த்தங்காய் ஆனது நம் உடலின் சூட்டை குறைக்க உதவும் பழம். அதை பெரும்பாலும் ஊறுகாய் தான் செய்வது வழக்கம் அதற்கு மாறாக இப்படி ஒரு கலவை சாதம் செய்து பாருங்கள். இது குழந்தைகளுக்கு தரும் லஞ்ச் பாக்ஸ் ரெசிபிக்களில் மிகவும் வித்தியாசமான ஒன்றாகும். #ranjanishome #kids3 Sakarasaathamum_vadakarium -
சுரைக்காய் சாம்பார் சாதம்(in pressure cooker) (Suraikkaai sambar satham recipe in tamil)
# steamசுரைக்காயை வைத்து எளிதான சுவையான சாம்பார் சாதம் இன்று செய்தேன். குக்கெரில் ஆவியில் வேக வைத்து செய்தேன்.சுவை மிகவும் நன்றாக இருந்தது. சுரைக்காய் தவிர வேறு காய்கள் எது வேண்டுமானாலும் சேர்த்து செய்யலாம். மேலும் இரண்டு மூன்று காய்கள் சேர்த்து கதம்ப சாம்பார் சாதம் ஆகவும் செய்யலாம். Meena Ramesh -
-
பட்டாணி கொத்தமல்லி சாதம் (Pattani kothamalli satham recipe in tamil)
#Kids3#lunchboxபள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பட்டாணி கொத்தமல்லி சாதம் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி உண்பர்.😘😘 Shyamala Senthil -
-
கோவில் சாம்பார் சாதம்(sambar sadam recipe in tamil)
#வெங்காயம் சேர்க்காத சாம்பார் சாதம்.தங்கள் வீட்டில் என்ன காய்கறிகள் இருக்கிறதோ தகுந்த காய்களை சேர்த்து இந்த சாம்பார் சாதம் செய்யலாம். இதனுடன் உருளைக்கிழங்கு முருங்கைக்காய் கத்திரிக்காய் போன்ற காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். சாதம் எவ்வளவு செய்கிறீர்களோ அதற்கு தகுந்தாற்போல கூடவோ குறைத்தோ காய்களை நறுக்கிக் கொள்ளவும். அதிக காய்கள் இருந்தால் அது அதில் கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளவும். இரண்டு மூன்று காய்கறி வகைகள் என்றால் காய்கறிகளின் அளவை அதிகரித்துக் கொள்ளவும்.இது நைவேத்தியத்திற்கு ஆக செய்த சாம்பார் சாதம் அதனால் வெங்காயம் சேர்க்க வில்லை. நான் இன்று வீட்டில் இருந்த காய்களை வைத்து செய்தேன். Meena Ramesh -
கொண்டைக்கடலை பீச் சுண்டல்/ channa 🏋️
#goldenapron3 #carrot #bookகொண்டைக்கடலை உடல்நலத்திற்கு மிக மிக நல்லது. சத்து நிறைந்தது. தினமும் காலையில் ஊறவைத்த கொண்டைக்கடலை ஒரு பத்து தின்றால் உடல்நலம் மிகவும் நன்றாக இருக்கும். கொண்டைக்கடலையில் கேரட், மாங்காய் சேர்த்து பீச்சில் விற்கும் மாங்காய் தேங்காய் பட்டாணி சுண்டல் வகையில் இந்த கொண்டைக்கடலை சுண்டலை செய்துள்ளேன். Meena Ramesh
கமெண்ட் (5)