கருவேப்பிலை சாதம்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#kids3
மிக எளிதாக விரைவில் செய்யக்கூடிய சாதம். கருவேப்பிலை மிகவும் உடலுக்கு நல்லது.கறிவேப்பிலையை எந்த உணவில் சேர்த்தாலும் பெரியவர் முதல் குழந்தைகள் வரை எடுத்துப் போட்டுவிட்டு சாப்பிடுவார்கள். கருவேப்பிலை சாதம் ஆக செய்து கொடுத்தால் கறிவேப்பிலையில் உள்ள எல்லா நற்குணங்களும் உடலுக்குvசென்று சேரும். அதுமட்டுமன்றி மிகவும் வாசமாக சுவையாக இருக்கும்.

கருவேப்பிலை சாதம்

#kids3
மிக எளிதாக விரைவில் செய்யக்கூடிய சாதம். கருவேப்பிலை மிகவும் உடலுக்கு நல்லது.கறிவேப்பிலையை எந்த உணவில் சேர்த்தாலும் பெரியவர் முதல் குழந்தைகள் வரை எடுத்துப் போட்டுவிட்டு சாப்பிடுவார்கள். கருவேப்பிலை சாதம் ஆக செய்து கொடுத்தால் கறிவேப்பிலையில் உள்ள எல்லா நற்குணங்களும் உடலுக்குvசென்று சேரும். அதுமட்டுமன்றி மிகவும் வாசமாக சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பேர்
  1. 2கப் உதிரியாக வேக வைத்த சாதம்
  2. 1கைப்பிடி கறிவேப்பிலை
  3. 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  4. 1ஸ்பூன் கடலை பருப்பு
  5. 3வர மிளகாய்
  6. 1/4 கப் தேங்காய் துருவல்
  7. கோலி குண்டு அளவு புளி
  8. தூள் உப்பு தேவையான அளவு
  9. 1 ஸ்பூன் நெய்
  10. தாளிக்க
  11. 1டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  12. 1/2ஸ்பூன் கடுகு
  13. 1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  14. 1/2 ஸ்பூன் கடலை பருப்பு
  15. 1வர மிளகாய்
  16. 1 டேபிள் ஸ்பூன் வறுத்த நிலக்கடலை(or) 5 முந்திரி பருப்பு
  17. 1 இணுக் கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மேற்கூறிய தேவையான அத்தனை பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    நான்கு அல்லது மூன்று வரமிளகாயை தங்கள் குழந்தைகளுக்கு தேவைக்கேற்ப காரத்திற்கு எடுத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் மிளகாயை இளஞ்சிவப்பாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். அதே எண்ணெயில் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு இரண்டையும் வறுத்து (இளம் சிவப்பாக) எடுத்துக் கொள்ளவும். ஆற வைத்துக் கொள்ளவும். துருவிய தேங்காய் கால் கப்,ஊற வைத்த புளி, கறிவேப்பிலை மற்றும் வறுத்த பொருட்களை மிக்ஸியில் சேர்த்து கொள்ளவும். நைசாக அரைக்கவும்.

  3. 3

    அதே வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் கடுகு, உளுத்தம்பருப்பு,கடலைப்பருப்பு, வறுத்த நிலக்கடலை, அல்லது முந்திரிப் பருப்பு,கிள்ளிய ஒரு வரமிளகாய், மற்றும் கருவேப்பிலை கொஞ்சம் கிள்ளி தாளித்துக் கொள்ளவும். சிவக்க தாளித்த உடன் அதில் அரைத்த கறிவேப்பிலை விழுதை சேர்த்து நன்கு வாசம் வர வறுத்துக்கொள்ளவும்.

  4. 4

    பிறகு இதில் 2 கப் உதிரியாக வேக வைத்த சாதத்துடன் தேவையான அளவு தூள் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து கொள்ளவும். தொட்டுக்கொள்ள வடகம் அல்லது குழந்தைகளுக்கு பிடித்த பொரிக்கும் வடக வகைகள்,அப்பளம், முறுக்கு,மிக்ஸர் போன்ற ஏதாவது ஒன்று சேர்த்து லஞ்ச் பாக்ஸ் ரெடி செய்து கொடுக்கவும். குழந்தைகள் மட்டுமல்ல அலுவலகம் செல்லும் பெரியவர்கள் கூட சாப்பிட எடுத்துச் சென்றால் நன்றாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes