எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
5-7நபர்கள்
  1. மட்டன் எலும்பு - 300 கிராம்
  2. துவரம்பருப்பு - 75 கிராம்
  3. கடலைப்பருப்பு - 75 கிராம்
  4. கத்தரிக்காய் - 250 கிராம்
  5. தக்காளி - 4
  6. பச்சை மிளகாய் - 4
  7. உப்பு - தேவையான அளவு
  8. மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
  9. மிளகாய் தூள் - 1.5 டீஸ்பூன்
  10. கரம் மசாலா - 1 டீஸ்பூன்
  11. இஞ்சி பூண்டு பேஸ்ட்ட - 1.5 டேபிள் ஸ்பூன்
  12. சின்ன வெங்காயம் பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன்
  13. மல்லித்தூள் - 2 டேபிள் ஸ்பூன்
  14. எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
  15. தண்ணீர் - தேவையான அளவு
  16. புளி - 1 எலும்பிச்சை அளவு
  17. தேங்காய் - 1/2 முடி
  18. நெய் - 1 டீஸ்பூன்
  19. மல்லித்தழை - சிறிதளவு

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    ஒரு குக்கரில் மட்டன் எலும்புகள் மற்றும் வேக தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 7 முதல் 8 விசில் வரை வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு குக்கரை திறந்து இரண்டு பருப்புகளையும் நன்கு கழுவி மட்டன் எலும்பு களுடன் சேர்க்கவேண்டும்.

  2. 2

    இதன் பிறகு குக்கரை மூடி 2 விசில் வைத்துக்கொள்ளவேண்டும்.

  3. 3

    ஒரு கடாயில் அடுப்பை பற்ற வைக்காமல் கத்தரிக்காய், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  4. 4

    பிறகு பருப்பு மற்றும் மட்டன் எலும்பு வேகவைத்த தண்ணீரை சேர்த்துக்கொள்ளவேண்டும். அதனுடன் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  5. 5

    அதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து கொள்ள வேண்டும்.

  6. 6

    பிறகு இஞ்சி பூண்டு விழுது, வெங்காய பேஸ்ட், மல்லித்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  7. 7

    தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிறகு எண்ணெய் சேர்த்து நன்கு கலந்த பிறகு அடுப்பை பற்ற வைக்க வேண்டும். காய் பாதி வெந்தவுடன் புளிக்கரைசல் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  8. 8

    புளியின் பச்சை வாடை போனபிறகு தேங்காயை அரைத்து விழுதாக சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் மல்லித் தழை சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.

  9. 9

    பிறகு நெய் சேர்த்து அதனுடன் வேக வைத்த மட்டன் எலும்புகள் மற்றும் பருப்பை சேர்த்துக்கொள்ளவேண்டும். குழம்பு நன்கு கொதித்த பிறகு மல்லித்தழை சிறிதளவு சேர்த்து இறக்க வேண்டும்.

  10. 10

    பிரியாணிக்கு ஏற்ற சைட் டிஷ் சுவையான மட்டன் எலும்பு தால்ச்சா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sara's Cooking Diary
அன்று
Madurai

Similar Recipes